Share:
Home Building Guide
Our Products
Useful Tools
Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost
Share:
டைனிங் ரூமில் அமைதியான மற்றும் அழகான சூழலை உருவாக்க, அதன் வடிவமைப்பில் வாஸ்து விதிகளை பின்பற்றுவது அவசியம். டைனிங் ஏரியாவிர்கான முக்கியமான சில வாஸ்து சாஸ்திரங்களை இப்போது பார்க்கலாம்:
வாஸ்து சாஸ்திரத்தில், உங்கள் டைனிங் ரூம் எனர்ஜியை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. டைனிங் ஏரியாவை மேற்கு அல்லது வடமேற்குப் பகுதியில் அமைக்க வேண்டும். இது செல்வம் மற்றும் வளத்தை கவரும் இடமாகக் கருதப்படுகிறது. டைனிங் ரூமை பெட்ரூமில் அல்லது வீட்டின் மையத்தில் அமைப்பது தவறு. இது பாஸிடிவ் எனர்ஜியின் ஓட்டத்தை தடுக்கலாம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் டைனிங் டேபிளின் திசை என்பது வெறும் அழகு சார்ந்த விஷயம் அல்ல; அது ஆரோக்கியத்தையும் நல்ல சக்தியையும் கட்டுப்படுத்துகிறது. வாஸ்து சட்டங்கள் படி, குடும்ப தலைவரை டைனிங் டேபிளில் மேற்கு அல்லது வடக்கு நோக்கி அமரச்செய்வது நல்லது. இது செரிமானம் மற்றும் நல்ல உரையாடல்களை மேம்படுத்தி, ஒற்றுமையான உணவருந்தும் அனுபவத்தை வழங்கும்.
நிறங்கள், டைனிங் ரூமின் எனெர்ஜியையும், சூழலையும் பாதிக்கக் கூடிய சக்தி கொண்டவை. மிதமான நிறங்களை வாஸ்து விதிப்படி தேர்வு செய்ய வேண்டும், உதாரணமாக, மஞ்சள் அல்லது பீஜ் நிறங்களை பயன்படுத்தலாம். வாஸ்து படி, இந்த நிறங்கள் டைனிங் ரூமில் ஒரு வரவேற்கத்தக்க சூழலை உருவாக்க வல்லமை வாய்ந்தது. எனர்ஜியை குறைக்கும் கறுப்பு அல்லது மங்கலான நிறங்களை தவிர்க்கவும்.
டைனிங் ரூம் வாஸ்து டிசைனில் நுழைவாயில் மிகவும் முக்கியம். அது வெளிச்சம் நிறைந்ததாகவும், எந்த தடைகளும் இல்லாததாகவும் இருக்க வேண்டும். இதனால் பாஸிடிவ் எனர்ஜி அந்த இடத்துக்குள் வருவதற்கான ஒரு தெளிவான வழியை உருவாக்க முடியும். இந்த பாஸிடிவ் எனர்ஜியை அதிகரிக்க நுழைவாயில் பகுதியில் சுப சின்னங்கள் அல்லது கலைநுட்பங்களால் அலங்கரிப்பது நல்லது
சரியான வெளிச்சம், டைனிங் ரூமின் சூழலுக்கு நல்ல அமைப்பை வழங்கும். காலை நேரங்களில், வாஸ்து விதிப்படி டைனிங் ரூமில் இயற்கை வெளிச்சத்தை அதிகப்படுத்துவது எனர்ஜியை உருவாக்கும். மாலை நேரங்களில், மென்மையான வெளிச்சத்தை தேர்வு செய்ய வேண்டும். இது உணவு அருந்தும் போது அமைதியான சூழலை உருவாக்கும். ஒவ்வொரு உணவருந்தும் அனுபவத்தையும் நினைவுகூரத்தக்கதாக மாற்றும்.
இது தவிர்த்து, டைனிங் ரூமின் வாஸ்தில் கவனிக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்கள்:
வாஸ்து விதிப்படி, குப்பயில்லாத டைனிங் ஏரியா பாஸிடிவ் எனர்ஜி ஓட்டத்தை மேம்படுத்தி அமைதியான சூழலை நிலைநாட்ட உதவும். டைனிங் ஸ்பேஸை தூய்மையாகவும் ஒழுங்காகவும் வைத்திருங்கள், தேவையற்ற பொருட்கள் இந்த இடத்தில் சேராமல் பார்த்துக் கொள்ளவும்.
டைனிங் ரூமில் மரத்தால் ஆன ஃபர்னிச்சரைப் பயன்படுத்தவும். இது வாஸ்துவில் மிகச் சுபமாகக் கருதப்படுகிறது. மரம், வளர்ச்சியையும் ஒற்றுமையையும் பிரதிபலிக்கிறது . அதனால் மரம் இருக்கும் இடத்தில் பாஸிடிவ் எனர்ஜி அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
உணவு சாப்பிடும் முன் சிறிய பிரார்த்தனை செய்யுங்கள். அல்லது நன்றி சொல்லிய பிறகு சாப்பிடுவது நல்லது. இந்த செயல்முறை நல்ல எண்ணங்களை ஊக்குவிக்கக்கூடியது, சாப்பிடும் உணவிற்கு ஆசீர்வாதமும் கிடைக்கும். நன்றி மற்றும் ஒற்றுமையான சூழலை இது உருவாக்கக்கூடியது.
டைனிங் ரூமின் வாஸ்து விதிப்படி, டைனிங் ரூம் கழிப்பறைக்கு அருகிலோ அல்லது அதன் அதற்கு மேலோ இருக்கக்கூடாது. கழிப்பறைகள் எதிர்மறை ஆற்றலைக் குறிக்கின்றன, மேலும் அவற்றின் அருகாமையில் டைனிங் ஸ்பேஸ் இருந்தால், அதில் உள்ள பாஸிடிவ் எனர்ஜியும் பாதிக்கப்படும்.
வீட்டில் பாஸிடிவ் எனர்ஜி, ஒற்றுமை மற்றும் நலன்களை மேம்படுத்த, வாஸ்து விதிப்படி டைனிங் ரூமை அமைப்பது, ஒரு சக்திவாய்ந்த வழியாகும். இந்த வலைப்பதிவில், டைனிங் ரூமின் திசை, வெளிச்சம் மற்றும் வாஸ்து விதிகள் குறித்து பார்த்துள்ளோம். இந்த டிப்ஸ் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும் உங்களின் தேவைக்கு ஏற்ப, ஒரு நிபுணரிடம் ஆலோசிப்பது நல்லது. மேலும் தகவல்களைப் பெற, வீட்டுக்கான வாஸ்து டிப்ஸ் குறித்த வலைப்பதிவை பார்க்கவும்.