வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



ஒரு நிலையான எதிர்காலத்தை தருவதே கிரீன் ஹோம் கன்ஸ்ட்ரக்ஷன்

கிரீன் ஹோம் கன்ஸ்ட்ரக்ஷன் என்பது சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் திறன்மிக்க வீடுகளை உருவாக்குவதாகும்.
இத்தகைய அணுகுமுறை சுற்றுச்சூழலுக்கும் உங்கள் அன்றாட வாழ்க்கைக்கும் எவ்வாறு பயனளிக்கும் என்பதை பற்றி இங்கு காண்போம்.

Share:


கிரீன் ஹோம் கன்ஸ்ட்ரக்ஷன் என்றால் என்ன?

கிரீன் ஹோம் கன்ஸ்ட்ரக்ஷன் அல்லது சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டுக் கட்டுமானம் என்பது சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு சிறந்த வீடுகளை உருவாக்குவதாகும். இது புத்திசாலித்தனமான மற்றும் முன்னோக்கு சிந்தனை வழியில் வீடுகளை கட்டும் திறனாகும், குறிப்பாக நம் பூமியை காப்பது நம் கடமை.

cdxc

வீட்டின் ஒவ்வொரு கட்டுமான படியிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டுக் கட்டுமானத்தினை கருத்தில் கொள்ள வேண்டும், வீட்டின் வடிவமைப்பு என்பது ஆரம்பம் முதல் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உள்ளே வைக்கப் போகும் ஃபர்னிச்சர்கள் வரை அனைத்தும் உள்ளடக்கியது. பாரம்பரிய கட்டிட முறைகளுடன் ஒப்பிடும்போது சுற்றுச்சூழலில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும் வீடுகளை உருவாக்குவதே சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டு கட்டுமானத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். வளங்களை எவ்வாறு பயன்படுத்துவது என்பதில் இந்த வீடுகள் திறன் மிக்கதாகவும், ஸ்மார்ட்டாகவும் இருப்பதை உறுதி செய்துகொள்வதன் மூலம் சூழலை பாதுகாக்கலாம்

 


கிரீன் பில்டிங்கின் நன்மைகள்



கிரீன் ஹோம் கன்ஸ்ட்ரக்ஷனின் நடைமுறைகள் குறிப்பிடத்தக்க நன்மைகளை வழங்குகின்றன. கிரீன் ஹோம் கன்ஸ்ட்ரக்ஷனின் யோசனைகளை, கன்ஸ்ட்ரக்ஷனிலிருந்து புதுப்பித்தல் வரை இருக்கும் பல்வேறு கட்டங்களிலும் வீடுகளில் இணைக்க முடியும். இருப்பினும்,  ஆர்கிடெக்ட்ஸ் மற்றும் டிசைனர்கள் கட்டுமானத்தின் தொடக்கத்தில் இத்தகைய நடைமுறைகளை கடைப்பிடிக்கும்போது, ​​கன்ஸ்ட்ரக்ஷனின் பெரும்பாலான  நன்மைகளை பெறமுடியும். ஹோம் கன்ஸ்ட்ரக்ஷன் திட்டத்திற்கான கிரீன் பில்டிங்கின் சில நன்மைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

 

1. சுற்றுச்சூழல் நன்மைகள்

சூற்று சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத கட்டுமான முறையே க்ரீன் கன்ஸ்ட்ரக்ஷன். நீர் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலமும், ஃபாசில் ஃபுயல் போன்ற புதுப்பிக்க முடியாத எரிசக்தி ஆதாரங்களைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதன் மூலமும்,  கிரீன் பில்டிங்குகள் நமது வளிமண்டலத்தையும் இயற்கைச் சூழலையும் பாதுகாக்க உதவுகின்றன. சுற்றுச்சூழலுக்கு உகந்த வீடுகள் கட்டுவதன்  மூலம் நீர் வீணாவதைக் குறைப்பது மட்டுமின்றி நீர் வளத்தை மேம்படுத்தவும் இயற்கை பொருட்களைப் பாதுகாக்கவும் முடியும்.

 

2. செலவை மிச்சப்படுத்துதல் மற்றும் பொருளாதார நன்மைகள்

பசுமையை காக்கும் கட்டுமான முறையில் செலவு மிச்சம். இம்முறையில் பல்வேறு வழிகளில் செலவு குறைகிறது, அதாவது குறைந்த செயல்பாட்டு செலவுகள், குடியிருப்பாளர்களுக்கான அதிகரித்த உற்பத்தித்திறன் மற்றும் குறைவான யுடிலிட்டி பில்கள் போன்று. கூடுதலாக, இது முதலீடுகளின் மீதான வருமானத்தை வழங்குவதோடு கட்டுமான செலவும் குறைவதன் மூலம் நிதி ஆதாயங்களையும் மேம்படுத்த முடியும். கிரீன் ஹோம்ஸ் மற்றும் பில்டிங்குகளை பராமரிப்பது எளிதானது, இதன் விளைவாக பராமரிப்பு செலவுகள் குறைவாகவே இருக்கும்.

 

3. எரிசக்தி திறன் மற்றும் பாதுகாப்பு

மின்சாரத்தை குறைவாகப் பயன்படுத்தும் வகையில் கட்டிடங்களை உருவாக்குவது இன்றைய காலக்கட்டங்களில் ஒரு பெரிய சவாலாக உள்ளது. சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டு கட்டுமானத்தில் உட்புற வெப்பநிலையை சரியாக வைத்திருக்கும் திறமையான இன்சுலேஷனைப் பயன்படுத்துவதன் மூலம் சிறந்த பலனை அடையலாம். மின்சாரத்தை மிச்சப்படுத்தவும், வசதியாக வாழ அல்லது வேலை செய்ய பெரும்பாலானோர் தற்காலத்தில் ஸ்மார்ட் ஏர் கண்டிஷனிங், இயற்கை ஒளி மற்றும் பசுமையான கூரைகளை பயன்படுத்துகின்றனர்.


கிரீன் ஹோம் கன்ஸ்ட்ரக்ஷனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது?



கிரீன் ஹோம் கன்ஸ்ட்ரக்ஷனை மேற்கொள்வதற்கான செயல்முறையை காட்டும் படிப்படியான வழிகாட்டி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:

 

1. தெளிவான இலக்கினை நிர்ணயித்தல் 

உங்கள் கிரீன் ஹோமிலிருந்து உங்களுக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்மானிக்கவும். ஆற்றலை சேமிப்பது, சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக இருப்பது மற்றும் கார்பன் ஃபூட்ப்ரின்ட்-ஐ குறைப்பது, ஆகியவற்றை பற்றி சிந்தியுங்கள்.

 

2. சரியான இடத்தைத் தேர்ந்தெடுங்கள் 

இயற்கையான சூரிய ஒளி மற்றும் காற்று உங்கள் வீட்டிற்கு கிடைக்கக்கூடிய வகையில் இடத்தை தேர்வு செய்யுங்கள். அதிக வெப்பம் அல்லது ஏர் கண்டிஷனிங் தேவைகள் இல்லாமல் , உங்கள் வீட்டை சூரிய ஒளியால் சூடாகவும், காற்றால் குளிர்ச்சியடையும் வகையில் கட்டமைக்க வேண்டும்.

 

3. மின்சாரத்தை மிச்சப்படுத்தும் டிசைன் 

"உங்கள் வீட்டை சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக கட்டிக்கொள்ள முடிவு செய்யும்போது, கிரீன் ஹோம்களை கட்டியெழுப்ப தெரிந்த ஒரு ஆர்கிடெக்ட் அல்லது டிசைனரை அணுகுவது அவசியம். இயற்கை ஒளி மற்றும் காற்றை நன்கு பயன்படுத்தும் வகையில் டிசைனை உருவாக்க அவர்கள் உதவுவார்கள். மேலும், உங்கள் வீடு நன்கு இன்சுலேட் செய்யப்பட்டிருக்கிறதா என்றும்  

ஆற்றலைச் சேமிக்க சரியான இடங்களில் ஜன்னல்கள் உள்ளனவா என்பதையும் உறுதி செய்ய வேண்டும்."

 

4. நீடித்துழைக்கும் பொருட்கள்

மறுசுழற்சி செய்யப்பட்ட மரம், மறுசுழற்சி செய்யப்பட்ட ஸ்டீல் மற்றும் குறைந்த VOCகள் கொண்ட பெயிண்ட்களைப் பயன்படுத்துங்கள். இவை உங்களுக்கும் இந்தப் பூமிக்கும் நன்மையளிக்கும்.



5. நீர் பாதுகாப்பு

தண்ணீரைச் சேமிக்க, குறைந்த ஓட்டத்தைக் கொண்ட குழாய்கள், ஷவர்ஹெட்ஸ் மற்றும் கழிப்பறைகள் ஆகியவற்றை நிறுவவும். மழைநீரை வெளியில் சேகரிக்க வேண்டும், மேலும் குறைந்த தண்ணீரைப் பயன்படுத்த, உங்கள் நிலப்பரப்பில் வறட்சியைத் தாங்கும் மரங்களை வளர்க்கலாம்.

 

6. ஸ்மார்ட் ஹோம் டெக்னாலஜி

ஹீட், கூலிங்க், லைட்டிங்க், செக்யூரிட்டி ஆகியவற்றை உங்கள் மொபைலில் இருந்தே கட்டுப்படுத்தும் வகையில்  ஸ்மார்ட் சிஸ்டங்களை பெறுங்கள். இது வசதியானது மற்றும் ஆற்றலை திறம்பட பயன்படுத்த உதவுகிறது.

 

7. மறுசுழற்சி மற்றும் கழிவுகளை குறைத்தல் 

நீங்கள் வீடு கட்டும் போது பொருட்களை மறுசுழற்சி செய்ய அல்லது மீண்டும் பயன்படுத்தும் வகையில் திட்டமிட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டுக் கன்ஸ்ட்ரக்ஷனில் குறைவான கழிவுகளே உருவாகும்.

 

8. ஆற்றல் திறன் மிகுந்த லைட்டிங் 

லைட்டுகளுக்கு LED அல்லது CFL பல்புகளைப் பயன்படுத்துங்கள். அவை அதிக ஆற்றலைப் பயன்படுத்துவதில்லை மற்றும் பழைய ஸ்டைல் பல்புகளை விட நீண்ட காலம் நீடித்துழைக்கும்.

 

9. சர்டிஃபிகேஷன்

"ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் டிசைன் சர்டிஃபிகேஷனில் லீடர்ஷிப் (LEED) போன்ற கிரீன் பில்டிங் சர்டிஃபிகேட்டைப் பெறுவது பற்றி சிந்தியுங்கள். 

 

இது உங்கள் வீடு சுற்றுச்சூழலுக்கு உகந்தது என்பதைக் காட்டுவதோடு, நீங்கள் அதை விற்க வேண்டும் என்றால் கூட அதன் விற்கும்மதிப்பை உயர்த்தி வழங்கும்."


சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டுப் பொருட்களின் வகைகள்

நீடித்துழைக்கும் வீடு என்பது நீடித்துழைக்கும் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் ஏற்ற பொருட்களைப் பயன்படுத்துவதாகும், இது உங்கள் கார்பன் ஃபூட்ப்ரின்டைக் குறைக்கவும், ஆற்றலைச் சேமிக்கவும், கழிவுகளை குறைக்கவும் உதவுகிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த சில வீட்டு கட்டுமான பொருட்கள் பின்வருமாறு:

 

1. மறுசுழற்சி மற்றும் மீட்டெடுக்கப்பட்ட பொருட்கள்: 



a) மறுசுழற்சி செய்யப்பட்ட கண்ணாடி: ஒரு ஸ்டைலான மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தோற்றத்திற்கு மறுசுழற்சி செய்யப்பட்ட கண்ணாடி கவுன்டர் டாப்புகள் அல்லது டைல்ஸ்களை பயன்படுத்திடுங்கள்.

 

b) ரீக்ளைம்டு மரம்: உங்கள் வீட்டிற்கு ஒரு தனித்துவமான தன்மையை வழங்க, தரையிலும், பீம்களிலும் , ஃபர்னிச்சர்களுக்கும் ரீக்ளைம்டு மரத்தைப் பயன்படுத்தவும்.

 

c) சல்வேஜ்டு செங்கற்கள் மற்றும் கல்: கட்டுமான பொருட்கள் தட்டுப்பாட்டினை குறைக்கும் அதே வேளையில் கவர்ச்சிகரமான வெளிப்புறச் சுவர்களை உருவாக்க, சல்வேஜ்டு செங்கற்கள் அல்லது கல்லைத் தேர்ந்தெடுக்கவும்.


2. சஸ்டைனப்லி சோர்ஸ்டு வுட்



a) FSC-சர்டிஃபைடு லம்பர்: பொறுப்பான தரத்தினை உறுதிசெய்ய, ஃபாரஸ்ட் ஸ்டூவெர்ட்ஷிப் கவுன்சிலால் (FSC) சர்டிஃபை செய்யப்பட்ட மரம் மற்றும் ப்ளைவுட்டை தேர்ந்தெடுங்கள்.

 

b) மூங்கில்: உங்கள் வீட்டின் பல்வேறு பயன்பாடுகளுக்கு, விரைவாக புதுப்பிக்கத்தக்க வளமான மூங்கில்களை பயன்படுத்தவும்.


3. குறைந்த VOC பெயிண்ட்கள் மற்றும் ஃபினிஷஸ்:



குறைந்த அல்லது ஜீரோ VOCகள்: ஆரோக்கியமான உட்புறக் காற்றின் தரத்தை மேம்படுத்த குறைந்த அல்லது பூஜ்ஜிய ஆவியாகும் ஆர்கானிக் காம்பௌண்டுகளை (VOCகள்) கொண்ட பெயின்ட்கள் , கறைகள் மற்றும் ஃபினிஷஸை தேர்வு செய்யவும்.


4. இயற்கையான இன்சுலேஷன்:



a)கம்பளி, பருத்தி அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட டெனிம்: பயனுள்ள மற்றும் நிலையான இன்சுலேஷனுக்காக கம்பளி, பருத்தி அல்லது மறுசுழற்சி செய்யப்பட்ட டெனிம் போன்ற இயற்கை இன்சுலேஷன் பொருட்களைக் கருத்தில் கொள்ளுங்கள்.

 

b) செல்லுலோஸ் இன்சுலேஷன்: சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டு கட்டுமானத்தில் உள்ள மற்றொரு விருப்பத்தேர்வு, மறுசுழற்சி செய்தித்தாளில் செய்யப்பட்ட செல்லுலோஸ் இன்சுலேஷன் ஆகும், இது திறன்மிக்க வெப்ப பாதுகாப்பை வழங்குகிறது.


5. ஆற்றலை சேமிக்கும் ஜன்னல்கள்:



a) டபுள் அல்லது ட்ரிபிள் க்ளேஸ்டு விண்டோஸ்: வெப்பப் பரிமாற்றத்தைக் குறைப்பதற்கும் ஆற்றல் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் டபுள் அல்லது ட்ரிபிள் க்ளேஸ்டு மற்றும் குறைந்த E கோட்டிங்க்ஸ் கொண்ட ஜன்னல்களை நிறுவவும்.

 

b)  எனர்ஜி ஸ்டார் ரேட்டிங்: ஆற்றல் திறன் தரநிலைகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்ய அதிக எனர்ஜி ஸ்டார் மதிப்பீட்டைக் கொண்ட ஜன்னல்களைத் தேர்வு செய்யுங்கள்.


6. சோலார் பேனல்கள்:



 

a) சுத்தமான ஆற்றல் உருவாக்கம்: உங்கள் வீட்டிற்கு சுத்தமான மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்க சோலார் பேனல்களில் முதலீடு செய்யுங்கள்.

 

b) சோலார் ஷிங்கிள்ஸ் அல்லது ஒருங்கிணைந்த கூரை: அழகியல் மற்றும் ஆற்றல்-திறனுள்ள கூரை தீர்வுக்கு சோலார் சிங்கிள்ஸ் அல்லது ஒருங்கிணைந்த சூரிய கூரையை கருத்தில் கொள்ளுங்கள்.



கிரீன் ஹோம் கன்ஸ்ட்ரக்ஷனை ஏற்றுக்கொள்வது என்பது சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு தேர்வு மட்டுமல்ல; இது ஒரு நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரு புத்திசாலித்தனமான மற்றும் பொறுப்பான வழியாகும். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்கள் மற்றும் நீடித்துழைக்கும் நடைமுறைகளைப் பயன்படுத்துவதன் மூலம், நமது கார்பன் ஃபூட்ப்ரின்டைக் குறைக்கலாம், பணத்தை சேமிக்கலாம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு ஏற்ற இடங்களை உருவாக்கலாம். எனவே, நீங்கள் ஒரு வீட்டு உரிமையாளராக இருந்தாலும் சரி, கட்டிடம் கட்டுபவர்களாக இருந்தாலும் சரி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வீட்டுக் கட்டுமானத்தைத் தேர்ந்தெடுப்பது மிகவும் நிலையான மற்றும் வளமான எதிர்காலத்தை உருவாக்குவதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு சிறிய படியாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....