வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



வாஸ்து சாஸ்திரப்படி பூஜையறை திசையின் முக்கியத்துவம்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி பூஜையறை திசை பற்றிய ஆன்மீக மற்றும் அறிவியல் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டால் உங்கள் வீட்டில் ஒற்றுமை உருவாகும்.

Share:


முக்கிய குறிப்புகள்: 

 

  • வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் வடகிழக்கு அல்லது கிழக்கு பகுதியில் பூஜையறை அமைத்தால், வீட்டின் ஆன்மீக சக்திக்கு ஏற்றதாக இருக்கும்.
 
  • சிலைகளின் திசையும் உயரமும் அவற்றின் மைய இடத்தையும் சரியாக அமைத்தால், பிரார்த்தனை நேரத்தில் உங்கள் ஆன்மீகம் அதிகரிக்கும்.
 
  • வாஸ்து வழிகாட்டுதலின் படி, மந்திரில் அதிகளவிலான சிலைகளை குவிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு சிலைக்கும் தேவையான மரியாதையைச் செய்ய வேண்டும்.
 
  • தூய்மையான பராமரிப்பு, விளக்குகள், மற்றும் பூஜையறை அலங்கோலத்தைத் தவிர்ப்பது, இது அனைத்தும் உற்சாகத்தையும் பாஸிட்டிவ் எனர்ஜியையும் மேம்படுத்தும்.
 
  • பூஜையறை இடத்தில் பக்தியும் அமைதியும் இருந்தால் வீட்டில் ஒற்றுமை இருக்கும்.
 
  • வாஸ்து படி பூஜையறை திசையின் கொள்கைகளை கடைபிடிப்பது என்பது இடத்தைப் பற்றியது மட்டுமல்ல. இது அன்றாட வாழ்வில் ஆன்மீகம், மரியாதை மற்றும் நம்பிக்கையை வளர்ப்பது பற்றியது.


பலருக்கு, பிரார்த்தனை அறை அல்லது பூஜையறை போன்ற ஆன்மீகத்திற்கான ஒரு குறிப்பிட்ட இடம் இல்லாமல் இருந்தால் வீடு முழுமையடையாது. இந்த புனிதமான இடம் தினசரி பிரார்த்தனை மற்றும் தியானத்திற்கு மட்டுமல்ல, வீடு முழுவதும் பாஸிட்டிவ் எனர்ஜியை பரப்புகிறது. இந்திய கட்டிடக் கலையின் வாஸ்து சாஸ்திரத்தின் மூலம், உங்கள் வீட்டின் பூஜையறை திசை எப்படி ஆன்மீக வளர்ச்சியையும் செழிப்பையும் வளர்க்கும் என்பதைப் பற்றி ஆழமாகத் தெரிந்துக் கொள்ளலாம். இந்த பஹிவில் வாஸ்து சாஸ்திர பூஜையறை திசையின் முக்கியத்துவத்தை விவரித்து, மந்திரை சிறந்த இடத்தில் வைப்பதற்கான வழிமுறைகளை ஆராய்ந்து, அது வீட்டில் வசிப்பவர்களுக்கு ஏற்படுத்தும் தாக்கத்தையும் புரிந்துகொள்வோம்.

 

 


வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் மந்திருக்கான முகப்பு திசை



வாஸ்து சாஸ்திரப்படி, ஒவ்வொரு திசையும் தனிப்பட்ட சக்திகளையும் தாக்கங்களையும் கொண்டுள்ளது. பூஜையறை திசை உங்கள் ஆன்மீக அனுபவத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான ஒரு சிறு விளக்கத்தை இங்கே காண்போம்.

 

1. வடகிழக்கு திசை (ஈஷான் மூலை):

மிகவும் சுபமாகக் கருதப்படும் வடகிழக்கு அல்லது ஈஷான் மூலையில், சிவபெருமான் இருப்பதாக நம்பப்படுகிறது.  மந்திரை இந்த பகுதியில் வைத்தால், பாஸிட்டிவ் எனர்ஜி சீராக நடமாட உதவுகிறது, இதனால் வீடு முழுவதும் அமைதி மற்றும் சாந்தி நிலவுகிறது.

 

2. கிழக்கு திசை:

 மந்திரை உங்கள் வீட்டின் கிழக்கு திசையில் அமைப்பது  சிறந்ததாகும். சூரியன் கிழக்கில் உதிக்கின்றது, இது ஞானம் மற்றும் அறிவு எழுச்சியை குறிக்கிறது. இதனால் இது பல வீடுகளுக்கு பிரியமான தேர்வாகும்.

 

பூஜையறை திசைக்கான வாஸ்து விதிகள் உங்களுக்கு வழிகாட்டுதலாக மட்டுமே உள்ளன என்பதை நினைவில் கொள்ளுங்கள். அதிலும் முக்கியமானது நமது இதயத்தில் இருக்கும் நம்பிக்கை, மரியாதை, பக்தி ஆகும். 

 

 

வீட்டு மந்திரில் சிலைகளை அமைப்பது



வீட்டு மந்திரின் அமைதியான சூழல், உங்கள் ஆன்மீகப் பழக்கவழக்கங்களை நேரடியாக பாதிக்கும். இங்கே சில வாஸ்து குறிப்புகள் உள்ள., அவற்றின் மூலம் உங்கள் மந்திரின் வைக்கும் சிலைகளை எப்படி சிறப்பாக வைத்து, ஆன்மீகத்துடனான தொடர்பை மேம்படுத்துவது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

 

1) கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைத்தல்

சிலைகளை கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமைப்பது மிகவும் பரிந்துரைக்கப்படுகிறது. இது நீங்கள் பிரார்த்தனை செய்யும் போது இந்த திசைகளில் அமருவதற்கான வாய்ப்பைப் தருகிறது. இதன் மூலம் உங்கள் பிரார்த்தனை மற்றும் தியானத்தின் பண்பு மேம்படும். இந்த திசைகள் வளம் மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜியை குறிக்கின்றன. எனவே இந்த திசைகளில் தெய்வ சிலைகள் வைத்தால் சிறந்ததாக இருக்கும். 

 

2)மையத்தை நோக்கி வைத்தல்

உங்கள் வழிபாட்டின் தெய்வ  சிலைகள் மையத்தில் வைக்கப்பட வேண்டும். இந்த மையப் பகுதி, பிரார்த்தனை அறையில் தெய்வத்தின் சிறப்பை குறிக்கிறது. இது உங்கள் வாழ்க்கையில் தெய்வீகத்தின் முக்கிய பங்கை குறிக்கிறது. 

 

3) உயரமும் அமைப்பும்

வாஸ்து படி மந்திரில் சிலைகள் மிக உயரமாகவோ, சிரியதாகவோ இருக்கக்கூடாது. பிரார்த்தனை செய்யும் போது, உங்கள் இதயத்துக்கு இணையாகக் கொஞ்சம் உயரத்தில் இருக்க வேண்டும். உட்கார்ந்திருக்கும் போது பிரார்த்தனை செய்யும் நபரின் இதயத்தை சிறந்த முறையில் இணைகிறது. தெய்வங்களின் முன் பிரசாதம் மற்றும் பிரார்த்தனைகளுக்கு போதுமான இடம் இருக்கிறதா என்று பார்க்கவும்..

 

4) பல சிலைகள்

பல சிற்பங்களை வைத்திருப்பது இந்து தெய்வங்களின் பரந்த பரம்பரையை குறிக்கின்றது. அதே வேளையில்,மந்திரில் அதிக சிலைகளை கூட்டமாக வைக்காமல் இருப்பது அவசியம். சிலைகளின் எண்ணிக்கையை உறுதிசெய்து. ஒவ்வொருவராலும் சரியாக மதிக்கப்பட வேண்டும். மேலும், ஒரே தெய்வத்தின்  ஒரே மாதிரியான இரண்டு சிலைகள் வைப்பதை தவிர்க்க வேண்டும். இது வழிபாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, கவனத்தை சிதறடிக்கக் கூடும்.

 

வாஸ்து படி சிலைகள் வைப்பது மற்றும் கோயில் திசையின் அம்சங்களைப் பற்றின கவனம் இருந்தால், நீங்கள் தெய்வத்துடனான ஆழமான மற்றும் தனிப்பட்ட தொடர்பை வளர்க்கலாம். இது அமைதி, ஆன்மீகம் மற்றும் நல்லிணக்கத்தின் கலங்கரை விளக்கமாக்கும். இது கோவிலை ஒரு ஒளிமயமான இடமாக செயல்பட உதவுகிறது.

 

 

வீட்டிலுள்ள கோவிலை பராமரிக்க சில டிப்ஸ்



உங்கள் வீட்டில் ஒரு புனித இடம் உருவாக்குவது, வீட்டில் அமைக்கும் கோவிலின் வாஸ்து விதிமுறைகளை பின்பற்றுவது, ஆன்மிகத்தையும் அமைதியையும் அழைக்க உதவுகிறது. மேலும் அதன் புனிதத்தன்மை மற்றும் செயல்திறனை உறுதி செய்கிறது.

 

1) சுத்தம் முக்கியம்

 கோவிலின் தன்மையானது அதன் தூய்மையில் உள்ளது. தொடர்ந்து சுத்தம் செய்வதால் கோபில் சுத்தமாக இருப்பது மட்டும் அல்லாமல், அந்த இடத்தின் சக்தியை உற்சாகமாகவும் பாசிடிவான முறையில் வைத்திருக்கவும் உதவுகிறது. சிலைகளைக் மெதுவாக துடைக்கவும், இடத்தை தூய்மைப்படுத்தவும், துணிகள் மற்றும் மலர்களை அடிக்கடி மாற்றவும், எப்போதும் புதுமையுடனும் புத்துணர்ச்சியுடனும் அந்த இடத்தை வைக்கவும். பூஜையறை இருக்கும் திசையைத் தாண்டி, அடிக்கடி சுத்தம் செய்வதால் பரிபூரண ஆன்மிக சக்தி உங்கள் வீட்டில் சீராக ஓடுகிறது. 

 

2)ஆன்மீகத்துடன் இடத்தை தேர்வு செய்வது

வீட்டில் பூஜையறை வைப்பதற்கான திசையை வாஸ்து சாஸ்திரம் படி தேர்வு செய்யும்போது, வீட்டில் பாசிடிவ் எனர்ஜி அதிகம் ஆகும். மேலும் நீங்கள் எந்தளவு ஆன்மீகத்துடன் அதை வைக்கிறீர்கள் என்பதும் அவசியம். உங்கள் வீட்டில் அமைதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பிராத்தனை செய்து மந்திரை அமைக்கவும். நீங்கள் தேர்வு செய்யும் இடம், முக்கியமானதாகவும் மரியாதையானதாகவும் இருக்க வேண்டும்.

 

3) அசுத்தத்தை தவிர்க்கவும்

 அசுத்தமான கோவில் பாசிடிவ் எனர்ஜியின் ஓட்டத்தை தடுக்கும். கோவிலின் அருகிலிருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கவும். ஆராதனைப் பொருட்கள், பூஜை உபகரணங்கள் மற்றும் பக்தி நூல்களை சரியாக அடுக்கி வைக்கவும். இடத்தை சுத்தமாகவும் அமைதியாகவும் வைத்திருக்க, கப்போர்ட்கள் மற்றும் செல்ஃப்களைப் பயன்படுத்தவும்.

 

4)வெளிச்சம் மற்றும் சூழல்

 வீட்டில் பூஜையறை இருக்கும் பகுதியில் நல்ல வெளிச்சம் இருக்க வேண்டும். இது வாஸ்து சாஸ்திரத்தில் மிக முக்கியமானது. நல்ல வெளிச்சத்துடன் இருக்கும் கோவில் அன்பாகவும் வரவேற்கும் விதமாகவும் இருக்கும். இயற்கை வெளிச்சத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டால், அது புனிதமான சூழலை அதிகரிக்கும். இரவில் ஒரு சிறிய விளக்கை ஏற்றி வைத்தால் அது ஆன்மீக தன்மையை அதிகரிக்கும். அற்புதமான வாசனைகள் கொண்ட எண்ணெய்கள் (எஸ்ஸன்ஷியல் ஆயில்) அமைதியான சூழலை உருவாக்கி தியானம் மற்றும் பிராத்தனையை ஊக்குவிக்கின்றன. 



 

உங்கள் வீட்டிலுள்ள மந்திரை வாஸ்து விதிகளின் படி வைத்தால்,பாசிடிவ் எனர்ஜி, ஆன்மிக வளர்ச்சி மற்றும் அமைதி வளர்க்கும் புனித இடத்தை உருவாக்க முடியும். இந்த எல்லா விதிமுறைகளையும் பின்பற்றுவது, மந்திருக்கான சிறந்த திசையை தேர்வு செய்ய மட்டுமல்ல; இது ஒரு தெய்வீக உறவை உருவாக்குகிறது, மரியாதையை ஊட்டுகிறது மற்றும் தினசரி வாழ்வில் நம்பிக்கையை வளர்க்கிறது.

 



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





  வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....