வாஸ்து படி கண்ணாடி வைப்பதற்கு செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை
செய்யவேண்டியவை
1) கண்ணாடிகளை வடக்கு அல்லது கிழக்கு சுவர்களில் வையுங்கள்: இது பாஸிட்டிவ் எனர்ஜியை ஈர்க்க ஏற்றது
2) அழகான காட்சிகளை பிரதிபலிக்க கண்ணாடிகளை பயன்படுத்துங்கள்: இயற்கை காட்சி அல்லது அழகான ஓவியங்களை பிரதிபலிக்கும் இடத்தில் கண்ணாடியை வைப்பது பாசிடிவிடியை இருமடங்காகக் கொடுக்கும்.
3) கண்ணாடிகளைத் தூய்மையாக வைத்திருக்கவும்: கண்ணாடியின் தூய்மை முக்கியம். ஏனெனில் இது சுத்தத்தயும் பாஸிட்டிவ் எனர்ஜியையும் பிரதிபலிக்கும்.
4) முழு நீள கண்ணாடிகளை பயன்படுத்துங்கள்: இப்படியான கண்ணாடிகள் முழு உடல் பிரதிபலிப்பை உறுதி செய்கின்றன. இதனால் எனர்ஜி தடை இல்லாமல் கிடைக்கும்.
5) கண்ணாடிகளை வெளிச்சம் அதிகரிக்கும் இடத்தில் வையுங்கள்: உங்கள் இடம் மங்கலாக இருந்தால், கண்ணாடிகளை இயற்கை வெளிச்சம் பிரதிபலிக்கும் இடத்தில் வைக்க வேண்டும். இது உங்கள் வீடு அல்லது அலுவலகத்தை பிரகாசமாக்கும்.
செய்யக்கூடாதவை
1)படுக்கைக்கு எதிரில் கண்ணாடிகள் வைப்பதைத் தவிர்க்கவும்: இது குறிப்பாக பெட் ரூமில் செய்யவே கூடாது. மனஅமைதியையும் உடல்நலக் குறைபாடுகளையும் ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
2) உடைந்த அல்லது சிதறிய கண்ணாடிகளைப் பயன்படுத்த வேண்டாம்: இவை உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் நெகட்டிவ் எனர்ஜியை உருவாக்கக்கூடும்.
3) கதவுகளை நேராக எதிர்கொள்ளும் வகையில் கண்ணாடிகளை வைக்க வேண்டாம்: இது வீட்டின் பிரதான நுழைவாயில் மற்றும் கதவுகள் இரண்டையும் உள்ளடக்கியது. ஏனெனில் இது எனர்ஜியை தடுக்கும்.
4) நெகடிவ் காட்சிகளை பிரதிபலிக்க வேண்டாம்: கண்ணாடியில் அலங்கோலன்களோ , குப்பை தொட்டியையோ அல்லது எந்த விதமான நெகடிவ் எனர்ஜியும் பிரதிபலிக்கக் கூடாது.
5) பழைய, மங்கிய கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டாம்: இவை பிரதிபலிப்பையும் சக்தியையும் மாறுப்படுத்துகின்றன. மேலும் வாஸ்து சாஸ்திரத்தில் மங்கலம் இல்லாதவையாக கருதப்படுகின்றன.
இந்த வாஸ்து பரிந்துரைகளின் அடிப்படையில் கண்ணாடிகளை சரியான இடத்தில் வைப்பதன் மூலம், உங்கள் வீட்டிலும் அலுவலகத்திலும் பாஸிட்டிவ் எனர்ஜியை மேம்படுத்தலாம்.