வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



பெயிண்ட் சாக்கிங் பற்றி தெரிந்திருக்க வேண்டியவை

வீட்டுச் சொந்தக்காரர்களுக்கும் பெயிண்ட் நிபுணருக்கும் பெயிண்ட் சாக்கிங் பற்றிய புரிதல் வேண்டும். அது உங்கள் பெயிண்ட்டின் அழகையும் தரத்தையும் காலம் முழுக்க பாதுகாக்க உதவும். இந்த பதிவில், பெயிண்ட் சாக்கிங் உருவாகும் காரணங்களை ஆராய்வதுடன், இதை எவ்வாறு சரிசெய்வது என்பதற்கான வழிமுறைகளை வழங்குகிறோம்.

Share:


முக்கிய குறிப்புகள்:


• பெயிண்ட் சாக்கிங் என்பது பொதுவான குறையாகும். பெயிண்ட் ஃபிலிம் தரமின்மை அடைவதன் விளைவாக, பெயிண்டின் மேற்பரப்பு தூசி போல பவுடராக மாறுகிறது.

 

• வானிலை மாற்றங்கள் மற்றும் யுவி ஒளி கதிர்கள், குறைந்த தரமுடைய பெயிண்ட், சரியான மேற்பரப்பு இல்லாதது, தவறான பெயிண்ட் பயன்பாடு போன்றவை பெயிண்ட் சாக்கிங்கிற்கு காரணமாகின்றன.

 

• பெயிண்ட் பவுடராக மாறுவதை புரிந்து கொண்டு, அதை தடுக்க சரியான நிரந்தர பராமரிப்பும் அவசியமாகும். இது பெயிண்ட்டின் தோற்றத்தை பாதுகாக்கும்.



பெயிண்ட் சாக்கிங் என்றால் என்ன?

கட்டிடப் பகுதிகளில் சால்க் பவுடரை போன்று சுவரில் பார்த்தால், அந்த பெயிண்ட் பவுடராக மாறுவதை கண்டறியலாம். இது பெயிண்ட் குறைபாடு காரணமாக இருக்கலாம். சுவரின் மேற்பரப்பில் இருக்கும் பெயிண்ட்டுடைய தடிமன் காலப்போக்கில் அழிந்து, பவுடர் போன்று மாறும்.

 

சூழல் பாதிப்புகள், பருவநிலை மாற்றங்கள், அல்லது யுவி கதிர்வீச்சுகள் போன்ற காரணங்களால் பெயிண்ட் அழிவதற்கு வாய்ப்புகள் உண்டு.. பவுடரை எளிதாக துடைத்து விடலாம். ஆனால் பெயின்ட் பூசப்பட்ட மேற்பரப்புகளுக்கு சிக்கலாக மாறிவிடும். அதனால்  நீண்ட கால ஆயுளும் பாதுகாப்பும்  இருக்காது . மேலும் தெரிந்து கொள்ள கீழே படிக்கவும், பெயிண்ட் சாக்கிங் பற்றிய விவரங்களும் அதை சரி செய்யும் வழிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

 

 

பெயிண்ட் சாக்கிங் ஏன் ஏற்படுகிறது?

வீட்டு உரிமையாளர்களுக்கும் பெயிண்ட் நிபுணர்களுக்கும்  பெயிண்ட் சாக்கிங் என்பது பிரச்சனையாகவும் சிக்கல்லாகவும் இருக்கிறது. பெயிண்ட் சாக்கிங் ஏன் ஏற்படுகிறது என்பதையும்  அதன் காரணங்களையும் பார்க்கலாம்.

 

1. பருவநிலை மற்றும் யுவி  கதிர்வீச்சினால் ஏற்படுகிறது

 அதிக நேரம் பெயின்ட் மீது சூரியஒளி, வெப்பம், மற்றும் ஈரப்பதம் நேரடியாக விழுந்தால் பெயிண்ட் சாக் பவுடராக மாறிவிடும். இதனால் பெயிண்ட்டின் மேற்பரப்பு அழிந்து, பவுடர் அல்லது சால்க் போன்று ஆகிவிடும்.

 

2. தரம் இல்லாத பெயிண்ட் 

பருவநிலை மற்றும் யுவி கதிர்களை எதிர்க்கும்  சேர்க்கைப் பொருட்களை குறைத்து தரம் இல்லாத பெயிண்ட்டை பயன்படுத்தினால், பெயிண்ட் சாக்கிங் ஏற்பட  வாய்ப்பு உள்ளது.

 

3. போதுமானதாக இல்லாத மேற்பரப்பின் தயாரிப்பு



பெயிண்ட் பூசுவதற்கு முன் மேற்பரப்பை சுத்தம் செய்யாமலோ, ப்ரைம் செய்யாமலோ, அல்லது தயார் செய்யாமலோ இல்லாவிட்டால், பெயிண்ட் பவுடராக மாற வழிவகுக்கும். மேற்பரப்பில் உள்ள ஏதேனும் மண்ணும், தூசியும்  மாசுக்களும் பெயிண்ட்டை  ஒட்டாமல் தடுக்கக்கூடும்.

 

4. தவறான பெயிண்ட்டை பயன்படுத்தல் 

பெயிண்ட் பயன்படுத்தும் போது தவறான முறையில் தடவுவது, உதாரணமாக ஒவ்வொரு அடுக்கு பெயிண்ட் இடையில் போதுமான உலர்வுக்கு நேரம் கொடுக்காமல் விடுவது அல்லது உற்பத்தியாளர் வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் இருப்பது, பெயிண்ட் சாக்கிங்கிற்கு காரணமாக இருக்கும்.



பெயிண்ட் சாக்கிங்கை எவ்வாறு சரி செய்வது?

பெயிண்ட் சாக்கிங்கை சரி செய்ய, முதலில் அந்த பவுடர் எச்சத்தை நீக்கி, மேற்பரப்பை சுத்தமாகவும் மென்மையாகவும் மாற்ற வேண்டும். பின்பற்ற வேண்டிய வழிகள்:

 

1. மேற்பரப்பை சுத்தம் செய்யவும் 



 மேற்பரப்பில் இருக்கும் பெயின்ட் பவுடரை முழுமையாக நீக்க, பிரஷர் வாஷர், ஸ்க்ரப் பிரஷ் அல்லது பிற சுத்தம் செய்யும் முறைகளை பயன்படுத்தவும். கடினமான பகுதிகளில் சாண்ட்பேப்பர் பயன்படுத்தி பவுடர் எச்சங்களை நீக்கவும்.

 

2. மேற்பரப்பை உலர விடவும் 

 சுத்தம் செய்த பிறகு அடுத்த கட்டத்திற்கு போகும் முன் மேற்பரப்பை முழுமையாக உலர விட வேண்டும். வெப்பம் மற்றும் ஈரப்பதத்தைப் பொறுத்து இவை உலர பல மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளலாம்.

 

3. ப்ரைமர் பயன்படுத்தவும் 



 உயர் தரமான ப்ரைமரை, பவுடர் பெயிண்ட் கொண்ட மேற்பரப்பிற்கு பயன்படுத்தலாம். இது மேற்பரப்பின் புதிய பெயிண்ட்டுக்கு நிலையான அடித்தளமாக இருக்கும்.  

 

4. டாப்கோட் பூசவும் 

 ப்ரைமர் உலர்ந்ததும், மேற்பரப்பிற்க்கு பொருத்தமான உயர்தர பெயிண்ட்  டாப்கோட்டை பூசவும். உற்பத்தியாளர் வழங்கிய வழிகாட்டுதலின்படி பூசுவதற்கும் உலர்வதற்கும் சரியான நேரங்களை கவனத்தில் கொள்ளவும்.

 

5. மேற்பரப்பை பராமரிக்கவும் 

 பெயிண்ட் செய்யப்பட்ட மேற்பரப்பை முறையாக பராமரிக்கவும். சரியாக சுத்தம் செய்ய வேண்டும். கால அவகாச ஆய்வுகளும் தேவையான இடங்களில் பெயிண்ட் டச்-அப் பும் செய்ய வேண்டும். சில சந்தர்ப்பங்களில், பெயிண்ட் பவுடர் மிகவும் கடுமையாக இருந்தால், முழு மேற்பரப்பையும் மீண்டும் பெயிண்ட் செய்ய வேண்டியிருக்கலாம். இந்த நிலையில்,தரமான, நீண்ட கால உழைப்பை பெற, ஒரு தொழில்முறை பெயிண்டிங் கான்ட்ராக்டரை பணியமர்த்தல் வேண்டும்.


பெயிண்ட் சாக்கிங் குறைபாடுகளை தவிர்க்கும் வழிகள்:

மேற்பரப்பில் ஏற்படும் பெயிண்ட் சாக்கிங் குறைபாடுகளைத் தவிர்க்க, பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்:

 

1. உயர்தர பெயிண்ட்டை  தேர்வு செய்யுங்கள் 

மேற்பரப்புக்காகவும் சுற்றுச்சூழலுக்காகவும் வடிவமைக்கப்பட்ட உயர்தர பெயிண்ட்டை பயன்படுத்தவும். குறைந்த தரம் மற்றும் மலிவான பெயிண்ட்கள், பவுடர் பெயிண்ட்டாகவும் குறைபாடுகளுடைய பெயிண்ட்டாகவும்  இருக்கும். 

 

2. மேற்பரப்பை சரியாக தயாரிக்கவும் 

பெயிண்ட் செய்யும் முன் மேற்பரப்பை தூசி, அழுக்கு மற்றும் மாசுக்களின்றி சுத்தமாகவும் உலர்வாகவும் வைத்திருங்கள். தேவைப்பட்டால், சுத்தம் செய்யும்  கருவியை பயன்படுத்தி சுத்தம் செய்து, முழுமையாக உலர வைக்க வேண்டும்.

 

3. ப்ரைமரை பயன்படுத்தவும் 

மேற்பரப்பிற்கும் சூழலுக்கும் பொருத்தமான, உயர்தரமான ப்ரைமரைப் பயன்படுத்தவும். பெயிண்ட் சுவரில்  சரியாக ஒட்ட ப்ரைமர் உதவி செய்கிறது. இது பெயிண்ட் சாக்கிங் மற்றும் பெயிண்ட் குறைபாடுகளையும் தடுக்கும்.

 

4. பெயிண்ட்டை சரியாகப் பூசவும் 

பூசும் நேரம் மற்றும் உலர்த்தும் நேரம் பற்றி தெளிவாக அறிய, உற்பத்தியாளர் வழங்கிய வழிகாட்டுதல்களை பின்பற்றவும். அதிக வெப்பத்திலும் ஈரமான சூழலிலும் பெயிண்ட் செய்யாமல் இருக்கவும், ஏனெனில் அது பெயிண்ட் தரம் மற்றும் நீடித்தத்தன்மையை பாதிக்கக்கூடும்.

 

5. பெயிண்ட் செய்யப்பட்ட மேற்பரப்பை பராமரிக்கவும் 

பெயிண்ட் செய்த மேற்பரப்பில் பெயிண்ட் சாக்கிங் ஏற்படுதல், மங்குதல் அல்லது பிற குறைபாடுகள் இருப்பதற்கான ஆய்வை செய்யவும்.  மேற்பரப்பை சுத்தம் செய்து, சேதம் ஏற்பட்டுள்ள பகுதிகளை டச்-அப் செய்யவும்.

 

6. மேல் ஒரு கோட் கொடுக்க வேண்டும்

சுற்றுச்சூழல் கடுமையாக இருந்தால், மேற்பரப்பு நேரடியாக பாதிக்க கூடும், அதனால் பெயிண்ட்டிற்கு மேல இன்னொரு கோட்டிங் கொடுக்க வேண்டும்.




சுருக்கமாகச் சொன்னால், பெயிண்ட் சாக்கிங் என்பது பெயிண்ட் செய்யப்பட்ட மேற்பரப்புகளில் ஏற்படும் பிரச்சினை. பெயிண்ட் சாக்கிங் ஏற்படுவதற்கான காரணங்களைப் புரிந்துகொண்டு, அதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கைகளை எடுக்கலாம். ஏற்கனவே ஏற்பட்டிருந்தால், சேதத்தை சரிசெய்யவும் முடியும். வீட்டு உரிமையாளரும் தொழில்முறை பெயிண்டரும், சரியாக மேற்பரப்பின் தயாரிப்பு முறைகளை பின்பற்றி, உயர்தரமான பெயிண்டைப் பயன்படுத்தினால் கடுமையான சூழல் பாதிப்புகள் ஏற்பட்டாலும் பெயிண்ட் பவுடர் ஆகாமல் தரமாக இருக்கும். பெயிண்ட் பவுடராக இருப்பதைக் கவனித்தால், அதை உடனடியாக சரிசெய்தால், உங்கள் பெயிண்ட்டின் நீடித்தன்மையை பாதுகாக்க முடியும்.




தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....