அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
1. பலமான பீம் வகை என்ன?
ஒரு பீம் வகையின் வலிமையானது, மெட்டீரியல்கள் மற்றும் வடிவமைப்பு போன்ற காரணிகளைச் சார்ந்ததாகும். பொதுவாக, ஸ்டீல் ரீயின்ஃபோர்ஸ்மெண்ட் உள்ள பீம்கள் அற்புதமான வலிமை மற்றும் பாரம் தாங்கும் திறனை வழங்குவதால், அவற்றைக் கட்டுமானத்திற்கான வலிமையான ஆப்ஷனாக்குகிறது. உங்கள் திட்டத்திற்கு ஏற்ற பீம் வகையைத் தீர்மானிக்க ஒரு பொறியாளருடன் கலந்தாலோசிப்பது விரும்பத்தக்கதாகும்.
2. எந்த வகை பீம் சிக்கனமானது?
சிம்ப்ளி சப்போர்டட் பீம்கள், பெரும்பாலும் சிறியது முதல் நடுத்தரமான கட்டமைப்புகள் வரை மிகவும் சிக்கனமான தேர்வாகக் கருதப்படுகிறது. அவற்றைக் கட்டுவது எளிதானதாகும் மற்றும் மற்ற வகை பீம்களுடன் ஒப்பிடும்போது குறைவான மெட்டீரியல்களே தேவைப்படுகிறது.
3. பீம்களும் தூண்களும் ஒன்றா?
இல்லை, பீம்களும் தூண்களும் ஒன்றல்ல. பீம்கள் என்பது பாரத்தைத் தாங்கி, அதை சப்போர்ட்களுக்குக் கடத்தும் கிடைமட்ட அல்லது சரிவு உறுப்பினர்கள் ஆகும், ஆதே நேரத்தில், தூண்கள் என்பது பீம்களைத் தாங்கி, பாரத்தை ஃபவுண்டேஷனுக்கு எடுத்துச் செல்லும் செங்குத்து உறுப்பினர்கள் ஆகும்.
4. பீம்களுக்கு இடையிலான குறைந்தபட்ச தூரம் என்ன?
பீம்களுக்கு இடையிலான குறைந்தபட்ச தூரம் குறிப்பிட்ட கட்டுமான வடிவமைப்பு மற்றும் பார தேவைகளைச் சார்ந்ததாகும். எனினும், பெரும்பாலான சூழ்நிலைகளில், பொறியாளர்கள் போதுமான கட்டமைப்பு நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக பீம்களுக்கு இடையே 3 மீட்டரைக் குறைந்தபட்ச தூரமாக வைப்பார்கள்.
5. பீம்களுக்கான சிறந்த கான்கிரீட் கலவை விகிதம் என்ன?
பீம்களுக்கான கான்கிரீட் கலவை விகிதமானது கட்டமைப்பின் வலிமை மற்றும் நீடித்து உழைக்கும் தேவைகளைச் சார்ந்துள்ளது. பொதுவாக, 1 பகுதி சிமெண்ட், 2 பகுதிகள் மணல் மற்றும் 3 பகுதிகள் அக்ரிகேட் விகிதத்தில் உள்ள கலவையானது குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்களில் பொதுவாக பீம்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.