தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்

hgfghj


உங்கள் வீட்டிற்கான வெண்டிலேஷன் அமைப்புகளின் வெவ்வேறு வகைகள்

பல ஆண்டுகளுக்கு முன்பிருந்த விசாலமான வீடுகளுடன் ஒப்பிடும்போது நவீன வீடுகள் மிகவும் சிறியதாக உள்ளது. இடத்தின் அளவு சிறியதாக இருப்பதால், அவை குறுகலாக இருப்பது போல் தோன்றுவதைக் குறைப்பதற்காக முறையான வீட்டு வெண்டிலேஷன் தேவைப்படுகிறது. வீட்டின் வெண்டிலேஷன் வீட்டை சௌகரியமானதாக அல்லது அசௌகரியமானதாக மாற்றும் என்பதால், வெவ்வேறு வகை வெண்டிலேஷன் அமைப்புகள் குறித்தும், உங்கள் வீட்டை சௌகரியமானதாக்க எப்படி அவற்றை திட்டமிடுவதென்பது குறித்தும் அறிந்துகொள்வோம்.

Share:


• நவீன கால சிறிய வீடுகளுக்கு சௌகரியமான வாழ்க்கை சூழலுக்காகச் சரியாக திட்டமிடப்பட்ட வெண்டிலேஷன் தேவை.

 

• ஜன்னலையும் எங்கு வைப்பது என்பதையும், சிறப்பான வெண்ட்டிங், மற்றும் ஏர் பியூரிஃபையர் மற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன்களைப் பயன்படுத்துவதைக் கவனமாகக் கருத்தில் கொள்வது காற்றோட்டத்தை மேம்படுத்துவதற்கு முக்கியமானவை ஆகும்.

 

• அமைப்புகள் என்பது இயற்கையானது மற்றும் மெக்கானிக்கல் முதல் சமச்சீரான அமைப்புகள் வரை வேறுபடுகின்றன, அவை ஒவ்வொன்றும் தனித்துவமான நன்மைகளை வழங்குகின்றன.

 

• அமைப்பின் வகை, உத்தி, பட்ஜெட், அளவு, காற்றின் தரக் கண்காணிப்பு, பராமரிப்பு மற்றும் இன்ஸ்டலேஷன் உள்ளிட்டவைத் தேர்ந்தெடுக்கும் முடிவுகளில் அடங்கும்.



நல்ல வெண்டிலேஷன் அமைப்பு என்பது உங்கள் வீட்டின் ஒரு முக்கியமான பகுதி ஆகும், ஏனெனில், காற்றோட்டத்தை மேம்படுத்தவும், வீட்டின் சுற்றுச்சூழலை அழகாக வைக்கவும் வெண்டிலேஷன் உதவுகிறது. இன்றைய வீடுகள் சிறியதாக இருப்பதால், வீடுகளுக்குள் உள்ள சுற்றுச்சூழலைப் பாதுகாக்கக் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

 

வீட்டிற்குள் நுழைவும் சாதாரண செயல் கூட வீட்டின் வெண்டிலேஷன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு, சொந்த வீடு வைத்திருக்கும் அனுபவத்தை மோசமாக்கக்கூடும். ஏனெனில், முறையற்ற வீட்டு வெண்டிலேஷன் ஈரத்தன்மை மற்றும் பூஞ்சை போன்ற பிரச்சனைகளைக் கொண்டுவந்து, வீட்டில் துர்நாற்றத்தை விட்டுச்செல்லும். எனினும், ஈரத்தன்மை போன்ற பிரச்சனைகளை சரியான வாட்டர்ப்ரூஃபிங் இரசாயனங்களைப் பயன்படுத்தி சரி செய்யலாம். இந்த அனைத்து பிரச்சனைகளையும் தவிர்க்க சரியான வெண்டிலேஷனை உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறது. சரியான வெண்டிலேஷன் அமைப்பைப் பயன்படுத்துவதன் மூலம், ஒருவர் எந்த கவலையும் இல்லாமல் வீட்டிற்குள் நுழைந்து ஓய்வெடுக்கலாம்.


புதிய கட்டுமானங்களில் வீட்டு வெண்டிலேஷனின் முக்கியத்துவம்


நன்கு வெண்டிலேட் செய்யப்பட்ட வீடு என்பது பல ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட இப்போது மிகவும் முக்கியமானதாக் உள்ளது. அதிகரித்து வரும் மாசு, நெரிசலான நகர்ப்புற இடங்கள், மற்றும் குறைவான பசுமை காட்சிகள் காரணமாக, புதிய கட்டுமானங்களில் வெண்டிலேஷன் அமைப்பை மேம்படுத்துவது இன்று மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.

 

உங்கள் வீட்டில் ஈரப்பதம், புகை, சமையல் மணம் மற்றும் உட்புற மாசுகளை நீக்குவதற்கு வெண்டிலேஷன் உதவுகிறது. அடுப்புகள் மற்றும் ஃபயர்ப்ளேஸ்கள் போன்ற வீட்டு சாதனங்களில் இருந்து வெளிவரும் வாயுக்கள், மோசமாக வெண்டிலேட் செய்யப்பட்ட வீட்டில் சேர்ந்து, உங்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் அச்சுறுத்தலாம்.

 

எனவே, உங்கள் வீட்டைக் கட்டும்போது, புதிய, நல்ல தரமான காற்றை வழங்குவதற்காக உங்கள் வீட்டைக் காற்றோட்டமாக வைத்திருக்கும் வெண்டிலேஷன் அமைப்பைத் தேர்வு செய்ய உதவும் வகையில் வெவ்வேறு வெண்டிலேஷன் வகைகளை நீங்கள் மதிப்பீடு செய்ய வேண்டும்.

 

சரியான வீட்டு வெண்டிலேஷன் அமைப்பு அட்டிக்கில் உள்ள வெப்ப அளவுகளைக் கட்டுப்படுத்தி, மூடப்பட்டுள்ள இடங்கள் மற்றும் பேஸ்மெண்ட்டில் ஈரத்தன்மையைக் குறைத்து, இன்சுலேட் செய்யப்படாத சுவர்களில் இருந்து ஈரப்பதத்தை நீக்குகிறது. எனவே, வீட்டின் காற்றோட்டத்திற்கு உதவும் இடத்தில் ஜன்னல்களைப் பொறுத்த வேண்டும். எந்த தடையுமின்றி காற்று கடந்து செல்வதை உறுதி செய்வதற்காக சமயலறை சிம்னிகள் மற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன்களைப் பயன்படுத்தவும். மேலும், உங்களின் குளியலறைக்குக் கூட எக்ஸாஸ்ட் ஃபேன்களை நீங்கள் பயன்படுத்தலாம்.


உங்கள் விட்டு வெண்டிலேஷனை எப்படி திட்டமிடுவது?

இன்று, அதிக எண்ணிக்கையிலான மக்கள், முன் வடிவமைக்கப்பட்ட மற்றும் கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடங்களில் வாழ்வதால், வீட்டின் ஒட்டுமொத்த வடிவமைப்பைத் தேர்வு செய்வதற்கு குறைவான வாய்ப்பே அவர்களிடம் உள்ளது. நீங்கள் அத்தகைய வீட்டில் வாழ விரும்பினால், அதிகபட்ச வெண்டிலேஷனை உறுதி செய்ய முக்கியமான காரணிகளை மனதில் கொள்ள வேண்டும்.


1. ஜன்னலை வைக்கும் இடம்



நீங்கள் அடுக்கு மாடி குடியிருப்பு அல்லது தனி வீட்டில் வாழ்ந்தாலும், உத்தி சார்ந்து வைக்கப்பட்ட ஜன்னல்கள் ஃப்ரெஷ்ஷான காற்றுக்கான முதன்மை ஆதாரமாக உள்ளது. வெண்டிலேஷனை அதிகரிப்பதற்கு, காற்றோட்டத்தை மேம்படுத்தும் மற்றும் திறந்த வெளி பகுதியை நோக்கி ஜன்னல்களைப் பொருத்தவும். இந்த எளிய படிநிலை உட்புற காற்றின் தரத்தைக் கணிசமாக மேம்படுத்தலாம்.


2. ஏர் ப்யூரிஃபையர்



காற்றோட்டத்தை மேம்படுத்தி, உட்புற காற்றை சுத்தமாகப் பராமரிக்க, சப்ளிமெண்டரி வெண்டிலேஷனாக ஏர் ப்யூரிஃபையரைப் பயன்படுத்தவும். இந்த சாதனங்கள் குறிப்பாக இயற்கை வெண்டிலேஷன் குறைவாக உள்ள அடுக்கு மாடி குடியிருப்புகளில் பயனுள்ளதாக இருக்கலாம்.


3. சமயலறைகள் மற்றும் குளியலறைகளுக்கான சிறப்பு வெண்ட்



உங்கள் வீட்டின் சமயலறை மற்றும் குளியலறை போன்ற குறிப்பிட்ட பகுதிகளில், மாசுகளை நீக்கக் குறிப்பிட்ட வெண்ட்டிங் தேவைப்படும். சமயல் மணம் மற்றும் புகை வெளியே செல்வதற்காக சமயலறை சிம்னிகள் மற்றும் எக்ஸாஸ்ட் ஃபேன்களைப் பொருத்தவும். அதே போல், குளியலறைகளில் எக்ஸாஸ்ட் ஃபேன் வைப்பது ஈரப்பதம் மற்றும் நாற்றங்களை நீக்குவதன் மூலம் நல்ல காற்றின் தரத்தைப் பராமரிக்க உதவுகிறது.



4. ஜன்னலின் வடிவமைப்பு

உங்களின் விட்டை வடிவமைக்கும்போது, ஜன்னலின் அளவையும், அதை எங்கு வைக்கப்போகிறீர்கள் என்பதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல காற்றோட்டத்தை வழங்குவதற்காக, திறந்தவெளியாக உள்ள இடங்களை நோக்கியுள்ள உங்கள் வீட்டின் பக்கவாட்டில் பெரிய ஜன்னல்களைப் பயன்படுத்தவும். இந்த வடிவமைப்பு நீங்கள் வாழும் இடங்களில் ஃப்ரெஷ்ஷான காற்றோட்டத்தை அனுமதித்து, தொடர்ச்சியான வெண்டிலேஷனை உறுதி செய்கிறது.


5. பற்றாக்குறையான வெண்டிலேஷனுக்கு எக்ஸாஸ்ட் ஃபேன்கள்



நீங்கள் வாழும் இடத்தில் குறைவான காற்றோட்டத்தின் காரணமாகச் சரியான வெண்டிலேஷன் இல்லை என்றால், எக்ஸாஸ்ட் ஃபேன்களைப் பொருத்துவது குறித்து சிந்திக்கவும். சமச்சீரான வெண்டிலேஷன் அமைப்புகள் என்றும் அழைக்கப்படும் இந்த ஃபேன்கள், பாயிண்ட் சோர்ஸ் மற்றும் டக்டட் என்று இரண்டு வகைப்படும். பாயிண்ட் சோர்ஸ் எக்ஸாஸ்ட் ஃபேன்கள் குளியலறைகள் மற்றும் சமயலறைகள் போன்ற குறிப்பிட்ட இடங்களில் இருந்து துர்நாற்றங்கள் மற்றும் மாசுகளை நீக்கி, அவை ஒட்டுமொத்த உட்புற சூழலைப் பாதிப்பதிலிருந்து தடுக்க ஏற்றதாகும். டக்டட் அமைப்புகள் லிவிங் ரூம் மற்றும் படுக்கையறை போன்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் இடங்களில் ஃப்ரெஷ்ஷான காற்றை வழங்கி, நன்கு வெண்டிலேட் செய்யப்பட்ட வாழும் சூழலை உறுதி செய்கிறது.

 

வீட்டு வெண்டிலேஷன் டிசைனுக்கான இந்த காரணிகளைக் கவனமாகக் கருத்தில் கொண்டு, குறைவான டிசைனுக்கான வாய்ப்புள்ள அடுக்கு மாடி குடியிருப்புகள் அல்லது தனி வீடுகளில் கூட, போதுமான வெண்டிலேஷனை நீங்கள் திட்டமிடலாம்.


வீட்டு வெண்டிலேஷன் அமைப்புகளின் வகைகள் என்ன?

நன்கு வெண்டிலேட் செய்யப்பட்ட வாழ்விடத்தை உறுதி செய்ய வெண்டிலேஷன் அமைப்புகளின் வகைகளைப் புரிந்துகொள்வது முக்கியமாகும். இயற்கையான வெண்டிலேஷன் முதல் மெக்கானிக்கல் அமைப்புகள் வரை, ஒவ்வொரு அமைப்பும் தனித்துவமான பலன்கள் மற்றும் பரிசீலனைகளை வாங்குகின்றன. இந்த வெண்டிலேஷன் தீர்வுகளின் விவரங்களைக் காண்போம்:


1. இயற்கையான வெண்டிலேஷன்

ஜன்னல்கள் மற்றும் கதவுகளில் இருந்து கட்டுப்படுத்த முடியாத காற்றடிக்கும்போது இயற்கையான வெண்டிலேஷன் கிடைக்கிறது. எனவே, ஒரு வீட்டைக் கட்ட திட்டமிடும்போது, உங்களிடம் நிறைய இடம் இருந்தால், இயற்கையான காற்றோட்டத்தை அனுமதிக்கும் வகையில் அந்த இடத்தைச் சுற்றி ஜன்னல்கள் மற்றும் கதவுகளை வைக்கவும்.

 

2. எக்ஸாஸ்ட் வெண்டிலேஷன்

இந்த அமைப்புகள் மிகவும் அடிப்படையானதும் எளிமையானதுமாகும். பொது குளியலறை மற்றும் சமயலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன்களை நீங்கள் பொருத்தலாம். பெரும்பாலான வீடுகளில் அது உள்ளது, எனினும், எக்ஸாஸ்ட் ஃபேன்களுக்கு வெளிப்புறத்துடன் சரியான டக்ட் அமைப்பு வழங்கப்பட்டுள்ளதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும்; இல்லையெனில், அந்த அமைப்பு வெறுமனே ஈரப்பதத்தை நகர்த்தி, காற்றை உங்கள் வீட்டில் வேறு எங்கோ எடுத்துச்செல்லும்.

 

3. சப்ளை வெண்டிலேஷன்

இந்த அமைப்புகள் அழுத்தமூட்டப்பட்ட வெளி காற்றை வீட்டுக்குள் கொண்டுவந்து, உள்ளே உள்ள அதே அளவு காற்றை வீட்டிற்கு வெளியே அனுப்பச்செய்கிறது. பெரும்பாலான சப்ளை வெண்டிலேஷன் அமைப்புகள் ஏற்கனவே உள்ள மைய வெப்ப மற்றும் குளிர்ச்சி அமைப்புகளின் டக்ட்களையும், ப்ளோயர்களையும் பயன்படுத்துகிறது. இதற்கு, வெளியில் உள்ள காற்றை உள்ளே கொண்டுவரும் வகையில், ஏர் ஹேண்ட்லரை வெளிப்புறத்துடன் இணைக்கும் சிறிய சப்ளை டக்ட் மட்டுமே தேவைப்படுகிறது.

 

4. சமச்சீரான வெண்டிலேஷன்

இந்த அமைப்பு வீட்டிற்குள் இருக்கும் பழைய காற்றை வெளியேற்றும் அதே வேகத்தில் ஃப்ரெஷ்ஷான காற்றை வீட்டிற்குள் கொண்டுவருகிறது. சமச்சீரான வெண்டிலேஷன் அமைப்பு சரியாக வடிவமைக்கப்பட்டு பொருத்தப்பட்டால், அது வீட்டில் அழுத்தமூட்டவோ அழுத்தம் குறைக்கவோ செய்யாது, மேலும் அனைத்து அறைகளிலும் சரியான வெண்டிலேஷன் இருக்கும்.

 

5. மெக்கானிக்கல் வெண்டிலேஷன்

மெக்கானிக்கல் வெண்டிலேஷன் என்றும் அழைக்கப்படும் வெப்ப மீட்பு வெண்டிலேஷன், வழக்கமாக உங்கள் வீட்டின் ரூஃப்டாப்பில் அல்லது அடுக்குமாடி கட்டிடத்தின் மேலே அமைந்திருக்கும். இந்த வெப்ப மீட்பு வெண்டிலேஷன் ஃப்ரெஷ்ஷான கற்றை வழங்குவதற்காக வெவ்வேறு வெப்பநிலைகளுக்கிடையே வேலை செய்கிறது. இது வெண்டிலேஷன் மற்றும் காற்றோட்டத்தைப் பராமரிப்பதற்காக உங்கள் வீட்டிற்கு குளிர்ச்சியான காற்றை வழங்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.


உங்கள் வீட்டை வெண்டிலேட் செய்வதற்கு உங்களுக்கு என்ன தேவை?

திறன்மிக்க வீட்டு வெண்டிலேஷனை உருவாக்குவதற்கு பல்வேறு கூறுகளைக் கவனமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். உங்களின் வீடு நல்ல காற்றோட்டமாக இருப்பதை உறுதி செய்ய, பின்வருவன உங்களுக்கு தேவைப்படும்:


1. வெண்டிலேஷன் அமைப்பு

வெண்டிலேஷன் அமைப்புகளின் வகைகளிலிருந்து நீங்கள் எதைத் தேர்வு செய்வீர்கள் என்பது உங்கள் வீட்டின் லேயவுட் மற்றும் உங்களின் குறிப்பிட்ட தேவைகளைப் பெரிதும் சார்ந்திருக்க வேண்டும். இயற்கையான வெண்டிலேஷன் (ஜன்னல்கள் மற்றும் கதவுகள் மூலம்), மெக்கானிக்கல் வெண்டிலேஷன் (எக்ஸாஸ்ட் ஃபேன்கள், ஆட்டிக் ஃபேன்கள் மற்றும் முழு வீட்டிற்கான ஃபேன்கள் போன்றவை), அல்லது சமச்சீரான வெண்டிலேஷன் (வெப்ப மீட்பு வெண்டிலேஷன் அல்லது ஆற்றல் மீட்பு வெண்டிலேஷன் போன்றவை) போன்ற மேலே குறிப்பிடப்பட்டுள்ளவற்றில் ஒன்று பொதுவான ஆப்ஷன்களில் அடங்கும். ஒவ்வொரு அமைப்பிலும் நன்மைகள் மற்றும் தீமைகள் உள்ளன, எனவே, உங்களின் வீட்டுக்கு பொருத்தமான ஒன்றைத் தேர்வு செய்வது முக்கியமாகும்.

 

2. வெண்டிலேஷன் உத்தி

உங்களின் இலக்குகளுக்கு ஏற்ற வீட்டு வெண்டிலேஷன் உத்தியைத் தேர்வு செய்யவும். உதாரணத்திற்கு, நீங்கள் கூடுதலான ஈரப்பதத்தை நீக்க விரும்பினால், எக்ஸாஸ்ட் வெண்டிலேஷனை முதன்மையாகக் கொண்ட ஒரு அமைப்பு ஏற்றதாக இருக்கலாம். மாறாக, நீங்கள் ஆற்றல் செயல்திறன் நோக்கமாகக் கொண்டிருந்தால், வெப்பம் அல்லது ஆற்றல் மீட்பு திறன்களைக் கொண்ட சமச்சீரான வெண்டிலேஷன் அமைப்பைக் கருத்தில் கொள்ளவும்.

 

3. பட்ஜெட்

செலவுகள் மாறுபடக்கூடும் என்பதால், சரியான வெண்டிலேஷன் அமைப்புகளின் வகைகளிலிருந்து தேர்வு செய்யும்போது உங்களின் நிதி நிலையைப் புரிந்துகொண்டு, உங்களின் பட்ஜெட்டைத் திட்டமிடுவது முக்கியமாகும்.

 

4. சரியான அளவு

வெண்டிலேஷன் அமைப்பு உங்கள் வீட்டிற்கு ஏற்ற அளவில் இருப்பதை உறுதி செய்யவும். தேவையான அளவை விட பெரிதாக உள்ள அமைப்பு திறனற்றதாக இருக்கலாம், அதே சமயம் தேவையான அளவை விட சிறியதாக உள்ள அமைப்பு உங்களின் வெண்டிலேஷன் தேவைகளைத் திறம்பட சரி செய்யாமல் போகலாம்.

 

5. காற்றின் தரத்தைக் கண்காணித்தல்

உட்புற காற்றின் தரத்தைக் கண்காணிப்பது, உங்களின் வெண்டிலேஷன் அமைப்பு உகந்த முறையில் செயல்படுவதை உறுதி செய்ய அவசியமானதாகும். இதில் காற்றின் ஈரப்பதம், கார்பன் டை ஆக்ஸைடு அளவுகள், மற்றும் குறிப்பிட்ட மேட்டரை அளந்து, தேவையான அட்ஜஸ்மெண்ட்களைச் செய்ய காற்றின் தர சென்சார்களைப் பயன்படுத்துவது அடங்கும்.

 

6. பராமரிப்பு

ஃபில்டர்கள், ஃபேன்கள் மற்றும் மற்ற பொருட்களில் காலப்போக்கில் தூசி மற்றும் குப்பைகள் சேர்ந்து, அமைப்பின் திறனைப் பாதிக்கும். வழக்கமான பராமரிப்பு மற்றும் பழுதுபார்த்தலுக்கான உற்பத்தியாளரின் பரிந்துரைகளைப் பின்பற்றவும்.

 

7. நிபுணத்துவமிக்க இன்ஸ்டலேஷன்

நீங்கள் ஒரு மெக்கானிக்கல் அமைப்பைப் பொருத்துகிறீர்கள் என்றால், அதைத் தொழில் வல்லுநர்கள் மூலம் பொருத்த அறிவுறுத்தப்படுகிறது. வெண்டிலேஷன் அமைப்புகளின் வெவ்வேறு வகைகளைச் சரியாகப் பொருத்துவது, அமைப்புகள் சரியாக வேலை செய்வதையும், பாதுகாப்பு தரநிலைகளைப் பின்பற்றுவதையும் உறுதி செய்கிறது.

 

வெண்டிலேஷன் அமைப்புகளின் வெவ்வேறு வகைகளில் இருந்து நீங்கள் தேர்வு செய்வதற்கு முன், பின்வரும் கேள்விகளை ஒரு அனுபவமிக்க பொறியாளரிடம் நீங்கள் கேட்க வேண்டும்:

 

• கட்டிடத்தில் ஒட்டுமொத்த காற்றோட்டத்தின் திசை சுத்தமான பகுதியிலிருந்து அசுத்தமான பகுதியை நோக்கி செல்கிறதா?

• ஒவ்வொரு அறைக்கும் ஃப்ரெஷ்ஷான காற்றை வழங்குவதில் வெண்டிலேஷன் அமைப்பு எவ்வளவு திறன்மிக்கதாக உள்ளது?

• ஒவ்வொரு அறையிலிருந்தும் துர்நாற்றத்தை நீக்குவதில் வெண்டிலேஷன் அமைப்பு எப்படி திறம்பட செயல்படுகிறது?

 

 

வீட்டிற்கான வெண்டிலேட்டர் டிசைனை உறுதி செய்வதற்கான சில உதவிக்குறிப்புகள்

 

• சிறு ஜன்னல்கள் மூலம் கிராஸ் வெண்டிலேஷன்

• காற்று கடந்து செல்லும் வகையில் கதவுகளில் வலை அமைப்பை வழங்கவும்

• ஃப்ரெஷ்ஷான காற்றை வழங்கும் உட்புற செடிகளை நடவும்



ஆரோக்கியமான மற்றும் சௌகரியமான வாழ்க்கைச் சூழலைப் பராமரிப்பதற்கு நல்ல காற்றோட்டமான வீடு முக்கியமாகும். வெவ்வேறு வகை வெண்டிலேஷன் அமைப்புகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது முதல் அவற்றை ஆராய்வது வரை, உங்கள் வீட்டை வெண்டிலேட் செய்வது குறித்து தகவலறிந்த முடிவெடுப்பதற்கு தேவையான அறிவை நீங்கல் பெற்றுள்ளீர்கள். நீங்கள் இயற்கையான வெண்டிலேஷன், மெக்கானிக்கல் வெண்டிலேஷன் அல்லது சமச்சீரான வெண்டிலேஷன் என்று எதைத் தேர்ந்தெடுத்தாலும், நன்கு வெண்டிலேட் செய்யப்பட்ட வீட்டை உறுதி செய்வது உங்கள் வீட்டின் நலன் மற்றும் நீண்ட ஆயுளில் செய்யப்படும் ஒரு முதலீடு ஆகும். காற்றின் தரம் மற்றும் சௌகரியத்திற்கு முன்னுரிமை வழங்குவதன் மூலம், நன்கு வெண்டிலேட் செய்யப்பட்ட மற்றும் வரவேற்கத்தக்க வாழ்விடம் என்னும் பரிசை நீங்கள் பெறுவீர்கள்.



தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்





வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....