Get In Touch

Get Answer To Your Queries

Select a valid category

Enter a valid sub category

acceptence


சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் என்றால் என்ன, அதன் வகைகள் மற்றும் நன்மைகள் குறித்த வழிகாட்டி

கன மழையிலும் கூட, கட்டிடங்கள் எப்படி உலர்வாக இருக்கின்றன என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? அதன் இரகசியம் சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் ஆகும். தண்ணீர் மற்றும் ஈரப்பதத்திலிருந்து கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் அரணாக வாட்டர்ப்ரூஃபிங் செயல்பட்டு, கட்டிடம் உலர்வாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்கிறது.

Share:


நீங்கள் ஒரு வீடு கட்ட திட்டமிடுகிறீர்கள், மழை மற்றும் ஈரத்தன்மையிலிருந்து அதை எப்படி பாதுகாப்பது என்று வருத்தப்படுகிறீர்கள் என்றால், அதற்கான சிறந்த விடை சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் ஆகும். மழையில் ரெயின்கோட் அணிவது போன்று, நாம் நம் வீட்டை நீர் கசிவினால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்க வாட்டர்ப்ரூஃப் லேயரால் கவர் செய்கிறோம்.

 

வாட்டர்ப்ரூஃபிங் என்பது கட்டுமான திட்டங்களில் ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும், ஏனெனில், நீர் கசிவு கண்ணுக்கு தெரியாத ஈரத் திட்டுகள், பூஞ்சை மற்றும் கட்டமைப்பு நீர் சேதத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கட்டிடத்தின் ஒட்டுமொத்த வலிமையையும் பாதிக்கிறது. வாட்டர்ப்ரூஃபிங்கைச் செயல்படுத்துவதன் மூலம், நம்மால் பல்வேறு சூழல்களில் சிமெண்ட் அடிப்படையிலான கட்டமைப்புகளின் உறுதி, தோற்றம் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையைத் திறம்படப் பாதுகாக்க முடியும். இந்த ப்ளாகில், சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் என்றால் என்ன மற்றும் உகந்த வாட்டர்ப்ரூஃபிங்கை உறுதி செய்வதற்காக வெவ்வேறு வழிகளில் அதை எப்படி செய்கிறார்கள் என்பதை நாம் காண்போம்.



சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் என்றால் என்ன?



சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் என்பது குறிப்பிட்ட வாட்டர்ப்ரூஃபிங் இரசாயனங்களுடன் கலக்கப்பட்ட சிமெண்ட்டை ஒரு கட்டமைப்பின் பரப்பில் பாதுகாப்பு அரணாகப் பூசுவதைக் குறிக்கிறது. இந்த பாதுகாப்பு நடவடிக்கையானது, கட்டிடத்தின் கட்டமைப்பிற்குள் தண்ணீர் அல்லது ஈரப்பதம் ஊடுருவுவதைத் தடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கலவையானது, கட்டமைப்பின் உறுதி மற்றும் உலர் தன்மையை உறுதி செய்யும் வலுவான, நீர் எதிர்ப்பு லேயராக மாறுகிறது. கட்டுமான துறையில் உள்ள இந்த அவசியமான நடைமுறை, தண்ணீர் மற்றும் ஈரப்பதம் தொடர்பான சேதங்களுக்கு சிக்கனமான தீர்வை வழங்கும் அதே வேளையில் கட்டிடங்களின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் ஆயுளையும் அதிகரிக்கிறது.

 

 

சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங்கின் வகைகள்

கட்டமைப்பின் தேவை, இடம் மற்றும் தண்ணீர் மேற்பரப்பில் படும் அளவைச் சார்ந்து பல வழிகளில் இந்த வகை வாட்டர்ப்ரூஃபிங்கை மேற்கொள்ளலாம். இதன் பிரபலமான வகைகள் இதோ:

 

1. சிமெண்ட் அடிப்படையிலான வாட்டர்ப்ரூஃபிங்



இந்த முறையில், மேற்பரப்பில் ஒரு மெல்லியப் பூச்சாகப் பூசப்படும் ஒரு பேஸ்ட்டை உருவாக்குவதற்காக சிமெண்ட்டுடன் ஒரு வாட்டர்ப்ரூஃபிங் காம்பவுண்ட் கலக்கப்படும். அது உலர்ந்தவுடன், நீர் ஊடுருவலை அதிகம் எதிர்க்கும் ஒரு பாதுகாப்பு லேயராக மாறுகிறது. இந்த வகை வாட்டர்ப்ரூஃபிங் பயன்படுத்த எளிதானது மற்றும் அதிக பன்முகத்தன்மைக் கொண்டது, பெரும்பாலும் டாய்லெட்கள் மற்றும் சமயலறைகள் போன்ற ஈரம் அதிகமுள்ள பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இதன் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் வெவ்வேறு மேற்பரப்புகளில் நன்றாக ஒட்டிக்கொள்ளும் திறன் உள்ளிட்டவை அதன் நன்மைகள் ஆகும், மேலும் இது பெரும்பாலும் பேஸ்மெண்ட்கள், ரூஃப்டாப்கள் மற்றும் தண்ணீர் தொட்டிகளில் பயன்படுத்தப்படுகிறது.

 

2. லிக்விட் வாட்டர்ப்ரூஃபிங் மெம்பரேன்



லிக்விட் வாட்டர்ப்ரூஃபிங் மெம்பரேன் என்பது, ரோலர், ஸ்பிரே, அல்லது டிரவல் பயன்படுத்தி பூசப்படும் மெல்லிய பூச்சாகும், இது கியூர் ஆனதும் கான்கிரீட் மேற்பரப்பின் மீது ரப்பர் போன்ற வாட்டர்ப்ரூஃப் லேயராக மாறுகிறது. இது அற்புதமான நெகிழ் தன்மை மற்றும் நீடித்து உழைக்கும் தன்மையை வழங்குவதால், சிறு நகர்வுகளுக்கு உட்படக்கூடிய கட்டமைப்புகளின் சிக்கலான சூழ்நிலைகளுக்கு ஏற்ற தேர்வாக அமைகிறது. அவை பொதுவாக ரூஃப்கள், பால்கனிகள் மற்றும் ஈரமான பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றன. ஜாயிண்ட்கள் இல்லாமல் தொடர்ச்சியான அரணை உருவாக்கும் திறன் இந்த முறையின் குறிப்பிடத்தக்கப் பலன் ஆகும்.

 

3. பிட்டுமினஸ் பூச்சு



பிட்டுமினஸ் பூச்சு அல்லது அஸ்ஃபால்ட் பூச்சு என்பது அதன் அற்புதமான நீர் எதிர்ப்புத்தன்மை காரணமாக ஃப்ளெக்ஸிபிள் பாதுகாப்பு பூச்சுகளாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகை வாட்டர்ப்ரூஃபிங் ஆகும். அடர்த்தியான லேயராகப் பூசப்படும் இந்த பூச்சுகள் ஒரு திறன்மிக்க வாட்டர்ப்ரூஃப் அரணை வழங்குகிறது. சூரிய வெளிச்சத்திற்கு எதிராக அதன் எதிர்ப்புத்திறன் குறைவாக இருப்பதால் பெரும்பாலும் நிலத்திற்கு அடியில் இருக்கும் கான்கிரீட் கட்டமைப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் இந்த பூச்சு, அதன் உறுதியான ஒட்டும் தன்மை காரணமாக ஃபவுண்டேஷன்கள் மற்றும் கான்கிரீட் ஃபூட்டிங்ஸுக்கு சிறந்ததாகும்.

 

4. பிட்டுமினஸ் மெம்பரேன்



பிட்டுமினஸ் மெம்பரேன் வாட்டர்ப்ரூஃபிங் என்பது குறைவான சரிவுள்ள ரூஃப்களுக்கு முதன்மையாகப் பயன்படுத்தப்படும் ஒரு நம்பகமான நுட்பம் ஆகும். இது செல்ஃப்-அதெசிவ் மற்றும் டார்ச்-ஆன் மெம்பரேனைக் கொண்டுள்ளது. செல்ஃப்-அதெசிவ் எலிமெண்ட் என்பது, காலப்போக்கில் ஒட்டும் தன்மையை இழக்கக்கூடிய அஸ்ஃபால்ட், பாலிமர்கள் மற்றும் ஃபில்லர்களின் கலவை ஆகும். டார்ச்-ஆன் மெம்பரேன் பூசப்பட்டு, காலநிலையால் ஏற்படும் சேதத்திற்கு எதிராகப் பாதுகாக்க கிரானுலர் மினரல் அக்ரிகேட்ஸ் பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை வாட்டர்ப்ரூஃபிங், குறிப்பாக டார்ச்-ஆன் சீலிங், அதன் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் குறைவான செலவு காரணமாக விரும்பத்தக்கதாக உள்ளது.

 

5. க்ரிஸ்டலைன் அட்மிக்ஸ்சர்கள்



க்ரிஸ்டலைன் அட்மிக்ஸ்சர்கள் நேரடியாகக் கான்கிரீட் கலவையுடன் சேர்க்கப்படுகிறது, அங்கு அது தண்ணீர் மற்றும் ஹைட்ரேட் செய்யப்படாத சிமெண்ட் துகள்களுடன் எதிர்வினையாற்றி, கரைக்க முடியாத க்ரிஸ்டல்களாக மாறுகிறது. இந்த க்ரிஸ்டல்கள் கான்கிரீட்டில் உள்ள நுண்துளைகளை நிரப்பி, உள்நுழையும் தண்ணீரைத் திறம்படத் தடுக்கிறது. இந்த முறை, தண்ணீர் ஊடுருவலிலிருந்து கான்கிரீட்டைச் சீல் செய்து பாதுகாக்கிறது, மேலும் இது பல வகையான கான்கிரீட் பயன்பாடுகளுக்கு ஏற்றதாகும்.

 

6. அட்மிக்ஸ்சர் வாட்டர்ப்ரூஃபிங்



அட்மிக்ஸ்சர் வாட்டர்ப்ரூஃபிங் என்பது ஊடுருவும் தன்மையைக் குறைப்பதற்காக கான்கிரீட்டில் காம்பவுண்ட்களைச் சேர்க்கும் செயல்முறை ஆகும், இதன் விளைவாகத் தண்ணீரின் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது. ஒட்டுமொத்த நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் நீண்ட ஆயுளை மேம்படுத்துவதற்காகக் கலக்கும் செயல்முறையின் போது புதிய கான்கிரீட்டுடன் அட்மிக்ஸ்சர்களைப் பயன்படுத்தலாம். இந்த முறை, குறிப்பாகக் கான்கிரீட் முழுவது நிலையான வாட்டர்ப்ரூஃபிங்கை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ள பெரிய அளவிலான திட்டங்களுக்கு பலனளிக்கக்கூடியதாகும்.

 

 

சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங்கின் நன்மைகள்

தண்ணீர் நுழைவதனால் ஏற்படும் தீமைகளுக்கு எதிராகக் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதென்று வரும்போது, சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் பல நன்மைகளை வழங்குகிறது. இதை ஒரு விவேகமான முதலீடாக்கும் இதன் நன்மைகளைக் காண்போம்:

 

1. நீடித்து உழைக்கும் தன்மையை அதிகரிக்கிறது

கட்டமைப்புகளின் நீடித்து உழைக்கும் தன்மையை வாட்டர்ப்ரூஃபிங் கணிசமாக அதிகரிக்கிறது. தண்ணீருக்கு எதிராகப் பாதுகாப்பு அரணை உருவாக்குவதன் மூலமாக, அது கான்கிரீட் மற்றும் மேசனரி மெட்டீரியல்களை ஈரப்பதம் தொடர்பான சீர்குலைவிலிருந்து பாதுகாக்கிறது. இது கட்டமைப்பின் ஆயுளை அதிகரிக்கிறது, அடிக்கடி பழுது பார்க்கும், மாற்றியமைக்கும் தேவையைக் குறைக்கிறது.

 

2. பழுது பார்க்கும் செலவைக் குறைக்கிறது

வாட்டர்ப்ரூஃபிங் மூலமாக ஆரம்பத்திலேயே தண்ணீரினால் ஏற்படும் சேதத்தைத் தடுப்பது, நீண்ட காலத்திற்கு கணிசமான செலவுகளை உங்களுக்கு மிச்சப்படுத்தும். நீர் ஊடுருவலானது, பழுது பார்த்தல் தேவைப்படும், விரிசல்கள், அரிமானம், மற்றும் மற்ற கட்டமைப்பு சேதத்திற்கு வழிவகுக்கலாம். இது பாதுகாப்பு நடவடிக்கையாகச் செயல்பட்டு, விரிவான பழுதுபார்த்தலின் தேவையைக் குறைக்கிறது.

 

3. அரிமானத்தைத் தடுக்கிறது

நீர் ஊடுருவல் கான்கிரீட்டில் உள்ள ரீயின்ஃபோர்ஸ்மெண்ட் ஸ்டீலின் அரிமானத்திற்கு வழிவகுத்து, கட்டமைப்பின் உறுதியைப் பாதிக்கலாம். இது ஸ்டீலில் தண்ணீர் படாமல் தடுப்பதன் மூலம் அரிமானம் ஏற்படும் ஆபத்தைத் திறம்படக் குறைக்கிறது, அவ்வாறு மெட்டீரியலின் கட்டமைப்பு பலத்தைப் பராமரிக்கிறது.

 

4. நீர் கசிவைத் தடுக்கிறது

கட்டுமானத்தில் உள்ள மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று சுவர்கள் மற்றும் ஃப்ளோர்களில் தண்ணீர் கசிவதாகும். இது ஒரு ஊடுருவ முடியாத அரணை உருவாக்குவதன் மூலம் நீர் கசிவைத் திறம்பட தடுக்கிறது. இது குறிப்பாக கனமழை பெய்யும் வாய்ப்புள்ள பகுதிகளில் உட்புறம் உலர்வாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் பயனளிக்கிறது.

 

5. ஈரத்தன்மையைத் தடுக்கிறது

சுவர்களில் உள்ள ஈரத்தன்மை கரைகளை ஏற்படுத்தி, பெயிண்ட் உரிவதற்கு வழிவகுப்பதோடு மட்டுமல்லாமல், பூஞ்சை வளர்ச்சியின் காரணமாக உடல் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தாக அமைகிறது. முறையான சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங், குறிப்பாக க்ரிஸ்டலைன் அட்மிக்ஸ்சர் போன்ற நுட்பங்கள் சுவர்களில் ஈரத்தன்மையைத் தடுத்து, உலர்வான மற்றும் ஆரோக்கியமான வாழும் சூழலை உறுதி செய்கிறது.



இறுதியாக, சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் நீர் கசிவைத் தடுப்பதையும் தாண்டி பல நன்மைகளை வழங்குகிறது. இதில் ஆரம்பக்கட்ட சிறிய முதலீடு மட்டுமே தேவை, ஆனால், உங்களின் உட்கட்டமைப்பைப் பாதுகாத்து, செலவு அதிகமான பழுதுபார்த்தலைத் தடுத்து, கட்டமைப்பின் ஆயுளை அதிகரிப்பதன் மூலம் நீண்ட கால பலன்களை வழங்குகிறது. உங்கள் கட்டமைப்பின் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையில், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வாட்டர்ப்ரூஃபிங் முறைகளிலிருந்து சரியான வகையைத் தேர்வு செய்வது முக்கியமாகும்.



அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும்?

வழக்கமாக, பயன்படுத்தப்படும் வாட்டர்ப்ரூஃபிங் வகை மற்றும் ஒட்டுமொத்த பராமரிப்பைச் சார்ந்து 5 முதல் 10 ஆண்டுகள் வரை நீடிக்கலாம். எனினும், சுற்றுப்புற சூழ்நிலைகள் மற்றும் பயன்பாட்டு தரத்தின் அடிப்படையில் இது வேறுபடலாம்.

 

2. ப்ளாஸ்டரிங்கிற்கு முன்பு சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் செய்யப்படுமா?

ஆம். வழக்கமாக ப்ளாஸ்டரிங்கிற்கு முன்பு சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் செய்யப்படும். வாட்டர்ப்ரூஃபிங் லேயர், நீர் கசிவுக்கு எதிரான அரணாகச் செயல்பட்டு, அது ப்ளாஸ்டர் லேயரை எட்டுவதிலிருந்து தடுக்கிறது.

 

3. சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங் உலர்வதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங்கின் உலரும் நேரம், பயன்படுத்தப்படும் வாட்டர்ப்ரூஃபிங் மெட்டீரியலின் வகை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளைச் சார்ந்து மாறுபடலாம். எனினும், இது முழுவதுமாக உலர்வதற்குப் பொதுவாக 24 முதல் 48 மணிநேரங்கள் வரை எடுக்கும்.

 

4. வாட்டர்ப்ரூஃபிங்கிற்கு எந்த தரத்திலான சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது?

வாட்டர்ப்ரூஃபிங்கிற்காகப் பயன்படுத்தப்படும் சிமெண்ட் வழக்கமாக 43 அல்லது 53 தரத்தில் உள்ள OPC (ஆர்டினரி போர்ட்லாண்ட் சிமெண்ட்) அல்லது PPC (போர்ட்லாண்ட் பொசோலனா சிமெண்ட்) ஆகும்.

 

5. ரூஃப்களுக்கு சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங்கைப் பயன்படுத்தலாமா?

ஆம், ரூஃப்களுக்கு சிமெண்ட் வாட்டர்ப்ரூஃபிங்கைப் பயன்படுத்தலாம். எனினும், பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட வகை வாட்டர்ப்ரூஃபிங் ரூஃபின் மெட்டீரியல் மற்றும் கட்டமைப்பைச் சார்ந்ததாகும். பிட்டுமினஸ் மெம்பரேன் வாட்டர்ப்ரூஃபிங் மற்றும் லிக்விட் வாட்டர்ப்ரூஃபிங் மெம்பரேன்கள் பொதுவாக ரூஃப்களில் பயன்படுத்தப்படுகின்றன.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....