வெற்றிகரமான டெரஸ் வாட்டர்ப்ரூஃபிங்கை உறுதி செய்ய, இந்த படிநிலைகளைப் பின்பற்றுவது முக்கியமாகும். செயல்முறை குறித்த கண்ணோட்டம் இதோ:
1. மேற்பரப்பைத் தயார் செய்தல்
மேற்பரப்பு சீராகவும், எந்தவொரு சீரற்ற தன்மை இல்லாததாகவும் இருப்பதை உறுதி செய்வதற்காக, அழுக்கு, குப்பைகள் மற்றும் லூஸ் மெட்டீரியலை நீக்கி, டெரஸின் மேற்பரப்பை நன்றாகச் சுத்தம் செய்யவும்.
2. பலவீனமான சப்ஸ்டிரேட்டைப் பழுதுபார்த்தல் அல்லது வலுவூட்டுதல்
டெரஸ் மேற்பரப்பின் மீது உள்ள எதாவது விரிசல்கள் மற்றும் பலவீனமான பகுதிகளைக் கண்டுபிடித்து பழுதுபார்க்கவும் மற்றும் சீலண்ட், மோர்டார் அல்லது பிற சேர்மான பொருட்களைப் பயன்படுத்தி இடைவெளிகளை நிரப்பவும். வாட்டர்ப்ரூஃபிங் லேயர்களுக்கான வலுவான பேஸை உறுதி செய்வதற்காக இதைச் செய்ய வேண்டும்.
3. பிரைமரைப் பூசுதல்
டெரஸ் மேற்பரப்பில் வாட்டர்ப்ரூஃபிங் மெட்டீரியலின் ஒட்டும் திறனை மேம்படுத்துவதற்காகப் பிரைமரைப் பூசவும். சப்ஸ்டிரேட் மற்றும் வாட்டர்ப்ரூஃபிங் லேயர்களுக்கு இடையிலான பிணைப்பைப் பிரைமர் மேம்படுத்துகிறது.
4. அடிப்படைப் பூச்சைப் பூசுதல்
தேர்வு செய்யப்பட்ட வாட்டர்ப்ரூஃபிங் மெட்டீரியலின் அடிப்படைப் பூச்சை மேற்பரப்பில் சமச்சீராகப் பூசவும். அடிப்படைப் பூச்சு முதன்மையான வாட்டர்ப்ரூஃபிங் லேயராகச் செயல்பட்டு, நீர் ஊடுருவலுக்கு எதிரான அரணை வழங்குகிறது.
5. வலுவூட்டுதல்
தேவைப்பட்டால், வாட்டர்ப்ரூஃபிங் லேயருக்கு வலுவூட்டுவதற்காக, ஃபைபர் கிளாஸ் வலை அல்லது அதை ஒத்த மெட்டீரியலைப் பயன்படுத்தி அடிப்படைப் பூச்சைப் பலப்படுத்தவும்.
6. இடைநிலை பூச்சைப் பூசவும்
கூடுதல் பாதுகாப்பு மற்றும் நீடித்து உழைக்கும் தன்மைக்காக, வாட்டர்ப்ரூஃபிங்க் மெட்டீரியலின் இடைநிலை பூச்சைப் பூசவும். இந்த பூச்சு, வாட்டர்ப்ரூஃபிங் அரணை மேலும் பலப்படுத்தி, அடிப்படைப் பூச்சில் உள்ள வெற்றிடங்களை நிரப்புகிறது.
7. மேற்பூச்சைப் பூசவும்
மேற்பூச்சைப் பயன்படுத்தி வழங்கப்படும் ஃபினிஷ், UV எதிர்ப்புத்திறனை வழங்கி, கீழே உள்ள வாட்டர்ப்ரூஃபிங் லேயர்களைப் பாதுகாத்து, நீடித்திருக்கும் தீர்வை உறுதி செய்யும் இறுதி லேயரை வழங்குகிறது.