வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்



கிழக்கு முகப்பில் உள்ள வாஸ்து திட்டங்களால் வீட்டில் வளமான வாழ்வை உருவாக்குங்கள்.

வாஸ்து சாஸ்திரம் நம்முடைய வாழ்க்கையில் அமைதியும் சமநிலையும் கொண்டுவர முக்கியமானது. கிழக்கு முகப்பில் உள்ள வீட்டிற்க்கு வாஸ்து திட்டத்தை உருவாக்கும் முறையை அறிந்துக் கொள்ளுங்கள்.. இந்த திட்டம் வீட்டின் ஆற்றலை மேம்படுத்தி, சாந்தியையும் ஒற்றுமையையும் அதிகரிக்கும், குறிப்பாக நிறங்கள், கண்ணாடி இடம் மற்றும் இயற்கை கூறுகளின் பங்களிப்பையும் மையமாகக் கொண்டுள்ளது.

Share:


வீட்டின் அமைப்பு வெறும் புவியியல் திசையில் நிர்ணயிக்கப்படுவதில்லை; அது வீட்டின் ஆற்றல், செழிப்பு மற்றும் அமைதியை வளர்க்க அடிப்படையாகும். வாஸ்து சாஸ்திரத்தின் பாரம்பரிய கூறுகளைப் பின்பற்றி வீடுகள் வடிவமைக்கப்படும்போது, கிழக்கு முகப்பில் உள்ள வீடுகள் மட்டும் தனித்து நிற்கின்றன.

 

இந்த பதிவில், வாஸ்து சட்டங்களின்படி கிழக்கு நோக்கி அமைந்த வீட்டு திட்டங்களின் விவரங்களை ஆழமாக பார்க்கப்போகிறோம். நூற்றாண்டுகள் பழமையான வாஸ்து கொள்கைகளின் அடிப்படையில், இயற்கை உலகின் அருளோடு இத்தகைய திசை நிர்வாகங்களை எப்படி மக்களின் வாழ்க்கைக்காக சிறப்பாக பயன்படுத்தலாம் என்பதையும் பார்க்கப்போகிறோம்.

 

 



முக்கிய அம்சங்கள்

 

  • கிழக்கு முகப்பில் உள்ள வீடுகள் நேரத்திற்குச் சூரியன் வெளியிடும் முதல் ஒளியைக் கைப்பற்ற முடியும், இது ஆரோக்கியத்தையும் செழிப்பையும் ஆன்மீக மேன்மையையும் வளர்க்கும் ஆற்றல் நிறைந்த சூழலை உருவாக்குகிறது.

 

  • வாஸ்து அடிப்படையில் வீட்டின் அமைப்பை திட்டமிடுவதால், வீட்டின் பாசிட்டிவ் எனர்ஜியை அதிகரிக்கும்.

 

  • இதைச் சரியாகச் செய்ய முடியாத நிலையில், வாஸ்து நிறங்கள், கண்ணாடிகள் அமைத்தல், மற்றும் இயற்கை கூறுகளைச் சேர்ப்பது போன்ற எளிய வழிமுறைகள் மூலம், சமநிலையை பராமரித்து பாசிட்டிவ் எனர்ஜியை வரவேற்கவும் முடியும் .

வாஸ்து சாஸ்திரம் பற்றி புரிந்துக் கொள்ளுதல்

வாஸ்து சாஸ்திரம் என்பது இந்தியாவில் பாரம்பரியமாக இருக்கும் கட்டிடவியல் மற்றும் இடவமைப்புக் கலை அறிவியல் ஆகும். இது கட்டிடங்களை இயற்கையுடன் இணைக்க வழிகாட்டுகிறது. அதன் கொள்கைகள் திசை, வடிவியல் மற்றும் சமச்சீர் ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. வாஸ்துவின் நோக்கமானது வடிவத்தையும் ஆற்றலையும் சமநிலைப்படுத்தி, அவற்றால் பாசிட்டிவ் எனர்ஜி மற்றும் செழிப்பை பெறுவதும் ஆகும்.


கிழக்கு முகப்பு வீட்டு வாஸ்து திட்டத்தின் முக்கிய அம்சங்கள்

வாஸ்துவின்படி கிழக்கு நோக்கிய வீட்டை வடிவமைக்கும்போது, பண்டைய ஞானத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போகிறதா என்பதை கவனிக்க வேண்டும். கீழே கிழக்கு முகப்பில் உள்ள வீடுகளுக்கான வாஸ்து பற்றிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன: 

 

1) நுழைவாயில் மற்றும் தலை வாசல்



 தலை வாசலைக் கிழக்கு திசையின் ஐந்தாவது பகுதியில் அமைக்க வேண்டும். இந்த இடத்தில் கதவை அமைத்தால், அது வீட்டின் செழிப்பையும் மகிழ்ச்சியையும் நுழைவாயில் வழியாக அழைத்து வரும் என்று கூறப்படுகிறது. 

 

2) லிவிங் ரூம் 



வீட்டின் உறவு தொடர்புகளை மேம்படுத்த, வடகிழக்கில் லிவிங் ரூமை அமைக்க வேண்டும்.

 

3) சமையலறை 



நெருப்பின் கூறு ஆட்சி செய்யும் தென்கிழக்கு மூலை சமையலறைக்கு மிகச் சிறந்த திசை ஆகும்.

 

4) மாஸ்டர் பெட் ரூம்



வீட்டின் தென்மேற்குப் பகுதியில் மாஸ்டர் பெட் ரூம்  வைப்பது நிலைத்தன்மையும் வலிமையையும் கொண்டுவரும்.

 

5) குழந்தைகளின் ரூம்



குழந்தைகள் படிப்பதற்க்காகவும் எல்லாவற்றிலும் வெற்றி பெறுவதற்க்காகவும் குழந்தைகளின் ரூமை வடமேற்கில் அமைக்கலாம்.

 

6) பூஜை ரூம்/தியானம் இடம்



வட கிழக்குப் பகுதி அமைதியான மற்றும் புனிதமான இடம் என்பதால், பூஜை ரூம் அல்லது தியானத்திற்கான இடமாக இதை அமைக்கலாம்.


வெவ்வேறு அளவு நிலப்பரப்பிற்கு ஏற்ப கிழக்கு முகப்பு வாஸ்து திட்டம்

வாஸ்து நில அளவுகளுக்கு ஏற்ப மாறுபடும், அதன் விதிகளை பின்பற்றும் போது வடிவமைப்புக்கு நெகிழ்வுத்தன்மையும் கிடைக்கும். வேறுபட்ட அளவிலான நிலப்பரப்புகளில் வாஸ்து கொள்கைகளை பின்பற்றி எப்படி வீடு வடிவமைக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

 

1) 30x40 கிழக்கு முகப்பில் உள்ள வீட்டுக்கான வாஸ்து திட்டம்

அதிகப்படியான வீட்டின் உரிமையாளர்களின் விருப்பமாக விளங்கும் 30x40 கிழக்கு முகப்பு வாஸ்து திட்டம், இடம் குறுகியதாய் தோன்றினாலும் மிகுந்த வசதிகளை வழங்குகிறது. வாஸ்து விதிப்படி, தலை வாசல், லிவிங் ரூம்   மற்றும் பெட் ரூம் வாஸ்து திசைகளுடன் ஒத்திசையுமாறு வடிவமைக்கப்பட வேண்டும்.

 

2) 30x60 கிழக்கு முகப்பில் உள்ள வீட்டுக்கான வாஸ்து திட்டம்

சற்றே நீண்டு மற்றும் குறுகிய நிலப்பரப்பைக் கொண்டவர்கள், 30x60 கிழக்கு முகப்பு வீட்டு திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் வீட்டின் முன்புறம் அல்லது தோட்டத்திற்குச் சிறந்த இடம் கிடைக்கும். பாசிடிவ் எனர்ஜி பரவலுக்காக கட்டமைப்பை வாஸ்து கொள்கைப்படி, தலை வாசல், சமையலறை மற்றும் மாஸ்டர் பெட் ரூம்மை அமைக்கவும்.

 

3) 40x60 கிழக்கு முகப்பில் உள்ள வீட்டுக்கான வாஸ்து திட்டம்

பெரிய மற்றும் ஆடம்பரமான வீட்டை உருவாக்க விரும்புவோருக்கு 40x60 கிழக்கு முகப்பு வீட்டு திட்டம் மிகவும் பொருத்தமாகும். ஒரு குறிப்பிட்ட நோக்கம் மற்றும் திசையை மனதில் கொண்டு   நுழைவாயிலிலிருந்து பின்புறம் வரை வாஸ்துப்படி வடிவமைத்தால் , விரிவான இடங்களும், செழிப்பும், ஆரோக்கியமும் பரவும்.


வாஸ்து அடிப்படையில் கிழக்கு முகப்பில் உள்ள வீட்டுக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை.

 

கிழக்கு முகப்பில் உள்ள வீட்டுக்கான திட்டத்தில் செய்ய வேண்டியவை

 

  • வீட்டின் நுழைவாயில் பெரிய கதவாக அமைந்திருக்க வேண்டும்.
  • சூரிய ஒளி வரக்கூடிய வகையில், கிழக்கு திசையில் ஜன்னல்களை அமைக்க வேண்டும்.
  • வடகிழக்கு மூலையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும், இது தெய்வீக ஆற்றலைத் தரும்.

 

கிழக்கு முகப்பில் உள்ள வீட்டு திட்டத்தில் செய்யக்கூடாதவை.

 

  • சமையலறையை வடகிழக்கு மூலையில் அமைத்தால்  ஆரோக்கியப் பிரச்சினைகளுக்குக் காரணமாகும்.
  • வடகிழக்கு மூலையில் படிக்கட்டுகளை அமைக்கக்கூடாது, இது பொருளாதார இழப்புகளுக்கு வழிவகுக்கலாம்.
  • வடகிழக்கு  மற்றும் தென்மேற்கு மூலையில் பாத் ரூம் அமைத்தால் ஆரோக்கியம் மற்றும் செழிப்பில் பாதிப்புகள் ஏற்படும்.

வாஸ்து சாஸ்திரத்திம்படி கிழக்கு முகப்பின் முக்கியத்துவம்

வாஸ்து சாஸ்திரத்தில், கிழக்கு திசை மிகவும் சுபமாய் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த திசை சூரியனின் முதல் ஒளியுடன் தொடர்புடையது. தலை வாசல்  கிழக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். இது நல்ல ஆற்றல், வெற்றி, மற்றும் செல்வத்தை ஈர்க்கும். காலை பொழுதின் சூரிய ஒளியில் வைட்டமின் டி நிறைந்திருக்கிறது. அது வீட்டின் ஆரோக்கியத்தையும் நலத்தையும் மேம்படுத்துவதற்கும், வீட்டில் வசிப்பவர்களுக்கு வாழ்வில் சிறப்பு தருவதற்கும் உதவுகிறது. கிழக்கு முகப்பில் வாஸ்து திட்டம் உள்ளதனால் ஏற்படும் நன்மைகள்

 

1) அறிவின் அடையாளம்

கிழக்கு திசை சூரிய உதயத்துடன் தொடர்புடையது, இது ஒளி, அறிவு மற்றும் ஆன்மீக வளர்ச்சியைக் குறிக்கிறது. கிழக்கு முகப்பில் உள்ள வீடுகள் இந்த ஆற்றலைப் பயன்படுத்தி, வீட்டில் வசிப்பவர்களுக்கு அறிவை அளிப்பதாக நம்பப்படுகிறது. 

 

2) பாசிடிவ் எனர்ஜியின் வருகை.

வாஸ்து சாஸ்திரம் படி, கிழக்கு நோக்கி அமைந்துள்ள நுழைவாயில்கள் சுபமாகக் கருதப்படுகின்றன. இது காலை சூரிய கதிர்களால் வீட்டிற்குள் பாசிடிவ் எனர்ஜியை அழைத்து வரும்.  இது வீட்டை  பரிசுத்தமாக்கி, நன்மையை எளிதாக வரவேற்கும்.

 

3) ஆரோக்கியம் மற்றும் செழிப்பிற்கான நுழைவாயில்

காலை நேரத்தில் வீட்டில் ஒளிக்கும் சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிகமாக உள்ளது. இது வீட்டில் உள்ளவர்களுக்கு  ஆரோக்கியத்தை கொடுக்கும். மேலும், இந்த சூரிய ஒளி மன உற்சாகத்தையும் உற்பத்தித்திறனையும் பண வெற்றியையும் தரும்.

 

4) சமூக ஒற்றுமையை வளர்க்கும்:

 கிழக்கு திசை என்பது சமூக உறவுகளுடனும் தொடர்புடையது. இந்த திசையை எதிர்கொள்ளும் வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு  வெளியக சமூகத்துடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, சமூக நலனை மேம்படுத்தும்.

 

5) வளர்ந்துவரும் குடும்பங்களுகான சிறந்த தேர்வு:

வளர்ச்சி மற்றும் உயிருடன் தொடர்புடையதாக இருப்பதால், கிழக்கு நோக்கி அமைந்த வீடு இளைய தம்பதிகளுக்கும், வளர்ந்து வரும் குடும்பங்களுக்கும் பரிந்துரைக்கப்படுகிறது. இது வீட்டில் இருக்கும் இளம் உறுப்பினர்களின் வளர்ச்சியையும் நலனையும் ஆதரிக்கிறது.


வாஸ்து சிக்கல்களை சமாளித்தல்:

சில இடங்களில் வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்டுவதற்க்கு இடப் பற்றாக்குறை ஏற்படலாம் அந்த  சூழ்நிலைகளில் சில சின்ன மாற்றங்கள் மூலமாக நல்ல சக்திகளையும் சமநிலையையும் வீட்டுக்குள் சேர்த்து விடலாம்:

 

1) வாஸ்து நிறங்களைத் தேர்ந்தெடுத்தல்:

வீட்டின் உட்புறங்களில் நீலம், பச்சை மற்றும் வெள்ளை போன்ற நிறங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம், வீட்டினுள் அமைதியையும் வாஸ்து ஆற்றலையும் ஈர்க்க முடியும்.

 

2) சரியான கண்ணாடி அமைப்பு:

வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் கண்ணாடிகளை தொங்கவிடுங்கள். இதன் மூலம் இடத்தைப் பெரிதாகக் காட்டலாம். மேலும், இது வீட்டில் பாசிடிவ் எனர்ஜியை பெருக்கும் என்று நம்பப்படுகிறது

 

3) இயற்கையை இணைத்தல்:

வடக்குப் பகுதியில் ஒரு சிறிய நீர் ஊற்று போன்றவற்றை வைப்பதன் மூலம், வாஸ்து கொள்கைகளுடன் சமநிலையை உறுதிசெய்வதுடன் வீட்டின் அமைதியை நிலைநிறுத்த முடியும்.

 

இந்த நுண்ணிய பரிகாரங்கள், இடத்தின் ஆற்றலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், மற்றும் நகர்புற வீடுகளிலும் கூட வாஸ்து தரும் சமநிலையை அனுபவிக்க உதவும்.



கிழக்கு நோக்கிய வீட்டுத் திட்டத்தை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள் காலைப் பொழுதில் வரும் சூரிய ஒளியை உள்வாங்கிக் கொண்டு, உங்கள் இல்லத்தை நலமும் செழிப்பும் நிறைந்த இடமாக மாற்றுவீர்கள். வாஸ்து ஆலோசனைகளை மனதில் வைத்துக் கொண்டு, கிழக்கு நோக்கிய வீட்டை அமைத்து, அதை மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் செழிப்பின் அடிப்படையான வீடாக மாற்றுங்கள்.



தொடர்புடைய கட்டுரைகள்



பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....