3. புகழ்பெற்ற பிராண்டிலிருந்து டைல்ஸைத் தேர்ந்தெடுக்கவும்
சரியான லிவிங் ரூம் டைல்ஸ் டிசைனைத் தேர்வு செய்வது நன்கு சிந்திக்காமல் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கக்கூடாது. புகழ்பெற்ற மற்றும் தரமான தயாரிப்புகளுக்கு பெயர்பெற்ற டைல் பிராண்டைத் தேர்ந்தெடுக்கவும். இந்த துறையில் பல ஆண்டுகளாக உள்ள டைல் பிராண்டுக்கு ட்ரெண்ட்கள் குறித்து நன்றாக தெரியும், அத்துடன் உங்கள் லிவிங் ரூமுக்கான சிறந்த டைல்ஸை நீங்கள் பெறுவதை உறுதி செய்யும்.
4. டைல்ஸின் தரவரைவுகளைக் கருத்தில் கொள்ளவும்
லிவிங் ரூம் என்பது வீட்டில் அதிகமான ஆள்நடமாட்டம் இருக்கும் ஒரு இடமாகும். வீட்டின் மற்ற இடங்களை விட மிகவும் கடினமாக உழைக்கும் டைல்ஸைக் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும். எனினும், கீறல் விழாத மற்றும் கறை ஏற்படாத டைல்ஸைத் தேர்ந்தெடுக்க வேண்டும், ஏனெனில், அங்கு தான் உங்கள் குடும்பத்தில் பெரும்பாலானவர்கள் ஒன்றுகூடுவார்கள். மேலும், வேட்ரிஃபைட் டைல்ஸ் முதல் செராமிக் டைல்ஸ் வரை பலவகையான டைல்ஸ் உள்ளது; உங்களின் வாழ்க்கைமுறையைச் சார்ந்து உங்களின் இடத்திற்கான சரியான லிவிங் ரூம் டைல்ஸ் டிசைனைத் தேர்வு செய்யவும்.
5. சரியான நிறம் மற்றும் பேட்டர்னைத் தேர்ந்தெடுக்கவும்
லிவிங் ரூம் என்பது நாம் வீட்டில் இருக்கும்போது அதிகமாக நேரம் செலவிடும் ஒரு இடமாகும். அங்கு தான் நீங்கள் படம் பார்ப்பீர்கள், உங்கள் நண்பர்களுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள் மற்றும் விருந்தினரை வரவேற்பீர்கள், எனவே அழகான நிறங்கள் மற்றும் பேட்டர்ன்களைக் கொண்ட டைல்ஸை நீங்கள் தேர்ந்தெடுப்பதை உறுதி செய்ய வேண்டும். லிவிங் ரூமுக்கு நவீன டைல்ஸைப் பயன்படுத்தவும், குறிப்பாக உங்கள் ஃபர்னிச்சருக்கு ஏற்ற நடுநிலையான நிறத்தையும், அந்த இடத்தின் ஒட்டுமொத்த நவீன அழகியலை மேம்படுத்தும் தற்கால பேட்டர்னையும் கொண்ட டைல்ஸைத் தேர்வு செய்யவும்.
6. நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பராமரிப்பைச் சரிபார்க்கவும்
லிவிங் ரூமுக்கான ஃப்ளோர் டைல்ஸிற்கு நல்ல கவனிப்பும் பராமரிப்பும் தேவை. குறிப்பாக லிவிங் ரூம் டைல்ஸ் டிசைனைத் தேர்ந்தெடுக்கும்போது நீடித்து உழைக்கக்கூடிய மற்றும் எளிதாகப் பராமரிக்கக்கூடிய டைல்ஸைத் தேர்ந்தெடுக்கவும். சிறிது காலத்திலேயே உங்களின் ஃப்ளோர் டைல்ஸில் விரிசல்களை நீங்கள் பார்க்க விரும்ப மாட்டீர்கள், எனவே, நீடித்திருக்கும் மற்றும் எளிதாகச் சுத்தம் செய்யக்கூடிய டைல்ஸைத் தேர்ந்தெடுப்பது முக்கியமாகும்.