செங்கல் மேசனரி என்பது வெவ்வேறு வகையான செங்கல்கள் மற்றும் மோர்ட்டார்களை பயன்படுத்தி கட்டுமானங்களை உருவாக்கும் ஒரு முறையாகும். இது வலிமைக்கும், நீண்ட காலம் நிலைத்து நிற்கும் தன்மைக்கும், அழகுக்கும் பேர்போன மிகவும் பழமையான பிரபலமான கட்டுமான முறைகளில் ஒன்றாகும். செங்கல் மேசனரியில் செங்கல்களை ஒரு குறிப்பிட்ட முறைகளில் சரியாக அடுக்கி, அதை மோர்டார் வைத்து ஒருங்கிணைப்பர். இதன் மூலம் வலிமையான கட்டுமானத்தை உருவாக்க முடியும்.
செங்கல்களை களிமண் மற்றும் மற்ற பொருட்களை வைத்து செய்வார்கள். இது செவ்வக வடிவத்தில் இருக்கும். வெவ்வேறு அளவுகள், நிறங்கள் மற்றும் அமைப்புகளில் இவை இருக்கும். பல முறைகளில் செங்கல்களை அடுக்குவார்கள். இதை பாண்ட் பேட்டர்ன்ஸ் என்று கூறுவார்கள். இது கட்டுமானத்திற்கு வலிமையையும் நிலைத்தன்மையையும் கொடுக்கும். ஸ்றெட்ச்சர் பாண்ட், ஹெட்டர் பாண்ட், ஃப்ளெமிஷ் பாண்ட், இங்கிலீஷ் பாண்ட் என்று பல்வேறு வகையான பாண்ட் பேட்டர்ன்ஸ் இருக்கிறது. . ஒவ்வொரு பாண்ட் பேட்டனுக்கும் தனித்தனி செங்கல் அடுக்கு முறைகள் இருக்கிறது. இது கட்டுமானத்திற்கு வெவ்வேறு அழகைக் கொடுக்கும்.
செங்கல் மேசனரியின் வலிமை மற்றும் காலத்திற்கும் நீடித்து நிற்கும் தன்மையை அதிகரிக்க மோர்ட்டாரை ஒருங்கிணைக்கும் கருவியாக பயன்படுத்துவார்கள் சிமெண்ட், மண் மற்றும் தண்ணீரின் கலவை தான் மோர்டார். ஒவ்வொரு ப்ராஜெக்ட்டின் தேவைக்கு ஏற்ப இந்த கலவை வெவ்வேறு முறையில் தயாரிக்கப்படும். இந்தக் கலவை செங்கல்களின் இடைவெளியை நிரப்பி நிலைத்தன்மையை கொடுத்து, ஈரப்பதம் ஊடுருவாமல் தடுக்கும். செங்கல் மேசனரியின் அடிப்படைகளை நாம் புரிந்துக் கொண்டோம். இப்பொழுது வெவ்வேறு வகையான செங்கல் மேசனரி முறைகளைப் பார்க்கலாம்.
செங்கல் மேசனரியின் வகைகள்
மோர்டரின் வகை, செங்கல்களை அடுக்கும் முறை, ஒவ்வொரு செங்கலையும் இணைக்க பயன் படுத்தும் பாண்ட்களின் வகை, இவை அனைத்தையும் சார்ந்து தான் செங்கல் மேசனரி முறைகள் வகைப்படுத்தப்படும். இரு பொதுவான செங்கல் மேசனரி வகைகள்:
1. மண் செங்கல் மேசனரி வேலை