சிமெண்ட் Vs கான்கிரீட்
1. உட்கூறுகள்
கான்கிரீட் மற்றும் சிமெண்ட் இடையிலான முக்கிய வேறுபாடு அதன் உட்கூறுகளில் உள்ளது. சிமெண்ட், கான்கிரீட்டின் முக்கியமான கூறு ஆகும், மேலும் இது சுண்ணாம்புக்கல், களிமண், கிளிஞ்சல்கள் மற்றும் மணல் உள்ளிட்டவற்றின் கலவையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த மெட்டீரியல்கள் பொடியாக்கப்படுவதற்காக, நன்கு அரைக்கப்பட்டு, அதிக வெப்பநிலைகளில் சூடாக்கப்படுகின்றன. கான்கிரீட், மறுபுறம், சிமெண்ட், அக்ரிகேட்ஸ் (மணல் மற்றும் சரளைக்கல்) மற்றும் தண்ணீரின் கலவையிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு காம்போசிட் மெட்டீரியல் ஆகும். இது கான்கிரீட் மற்றும் சிமெண்ட் இடையிலான முக்கியமான வேறுபாடுகளில் ஒன்றாகும்.
2. செயல்பாடு
இந்த மெட்டீரியல்களின் செயல்பாட்டு முறையும் கான்கிரீட் மற்றும் சிமெண்ட் இடையிலான முக்கியமான வேறுபாடாகும். சிமெண்ட் பேஸ்ட்டாக மாறுவதற்கு தண்ணீருடன் கலக்கப்படுகிறது, இது அக்ரிகேட்ஸை ஒன்றாக பிணைக்கிறது. சிமெண்ட் மற்றும் தண்ணீருக்கு இடையிலான ஹைட்ரேஷன் எனப்படும் எதிர்வினை, பேஸ்ட்டை கெட்டியாகச் செய்து, திடமான கட்டமைப்பை உருவாக்குகிறது. காலப்போக்கில், கான்கிரீட் கலவை கெட்டியாகி நீடித்து உழைக்கக்கூடியதாகிறது.
3. பயன்பாடுகள்
கான்கிரீட் மற்றும் சிமெண்ட் இடையிலான மற்றொரு வேறுபாடு அவற்றின் பயன்பாட்டில் உள்ளது. சிமெண்ட் முதன்மையாகக் கட்டுமான துறையில் பல பயன்பாடுகளைக் கொண்ட கான்கிரீட்டைத் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. கான்கிரீட் பொதுவாக ஃபவுண்டேஷன்கள், சுவர்கள், ஃப்ளோர்கள், சாலைகள், பாலங்கள் மற்றும் பிற கட்டமைப்புகளைக் கட்டுவதற்கு பயன்படுத்தப்படுகிறது. செங்கற்கள், கற்கள் மற்றும் டைல்ஸிற்கான பிணைக்கும் பொருளாக, மோர்டார் தயாரிப்பில் சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது. இது மண்ணை நிலைப்படுத்தவும், கட்டுமான பழுதுபார்த்தல்களுக்கும் பயன்படுத்தப்படலாம்.
4. வகைகள்
இறுதியாக, கான்கிரீட் மற்றும் சிமெண்ட் இடையிலான வேறுபாடு அவற்றின் வகைகளிலும் உள்ளன. கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் போர்ட்லாண்ட் சிமெண்ட், ப்ளெண்டெட் சிமெண்ட், கட்டிடக்கலை திட்டங்களில் பயன்படுத்தப்படும் வயிட் சிமெண்ட் மற்றும் அணைகளிலும் ஃபவுண்டேஷன்களிலும் பயன்படுத்தப்படும் லோ ஹீட் சிமெண்ட் உள்ளிட்டவை சிமெண்ட் வகைகளாகும். லைம் கான்கிரீட், சிமெண்ட் கான்கிரீட் மற்றும் ரீயின்ஃபோர்ஸ்டு சிமெண்ட் கான்கிரீட் உள்ளிட்டவை கான்கிரீட் வகைகளாகும். இந்த வகைகள் அவற்றின் மெட்டீரியல்கள் மற்றும் நோக்கத்தில் வேறுபடுகின்றன.