உங்கள் வீட்டைக் கட்டுவதற்கு முன் மற்றும் கட்டும்போது உங்களின் மிகப்பெரிய கவலை - செலவு குறைவான வீடுகள் பாதுகாப்பானவையா? உங்கள் வீட்டைக் குறைந்த செலவில் கட்டுவதற்கு திட்டமிடல் வேண்டும், அவ்வாறு நீங்கள் உங்கள் பட்ஜெட்டை மீறி செலவு செய்ய மாட்டீர்கள். நீங்கள் மெட்டீரியல்களின் தரத்தின் மீது சமரசம் செய்துகொள்ள வேண்டியதில்லை, எப்போதும் அளவை விட தரத்தில் கவனம் செலுத்துங்கள்.
உங்கள் வீட்டைக் கட்டுவதற்கு உதவக்கூடிய சில செலவு குறைவான வீடு கட்டுமான யோசனைகள் பின்வருமாறு:
1) கட்டிடத்தைச் செங்குத்தாகக் கட்டுவது கிடைமட்டமாகக் கட்டுவதை விட செலவு குறைவானதாகும், அதாவது, நில மட்டத்தில் மூன்று அறைகளைக் கட்டுவதை விட மற்றொரு தளத்தைச் சேர்ப்பது சிக்கனமானதாகும். செலவை மிச்சப்படுத்துவதற்காக உங்கள் மனையை நன்கு பயன்படுத்தி கிடைமட்டத்திற்கு பதிலாகச் செங்குத்தாகக் கட்டவும். உதாரணத்திற்கு, நான்கு படுக்கையறை உள்ள ஒற்றை தள வீடு கட்டுவதற்கு பதிலாக, ஒரு தளத்திற்கு இரண்டு படுக்கையறைகள் என்ற விகிதத்தில் இரண்டு தளம் கொண்ட வீட்டைக் கட்டவும்.
2) விரிவான கணக்கு பதிவை வைத்துக்கொள்வது உங்கள் செலவினங்களைக் கட்டுப்படுத்த உதவுவதோடு மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் கட்டிடக் கலைஞர்கள், ஒப்பந்ததாரர்கள் அல்லது பொறியாளரிடம் எழக்கூடிய எந்தவொரு சச்சரவுகளுக்கு எதிராகவும் உங்களைப் பாதுகாக்கும்.
3) வீட்டை வடிவமைக்கும்போது உங்கள் குடும்பத்தின் எதிர்கால தேவைகளையும் கருத்தில் கொள்ளவும், உதாரணத்திற்கு, உங்கள் குழந்தைகள் வளர்ந்த பிறகு அவர்களுக்கான கூடுதல் அறை. உங்கள் வீட்டைக் கட்டி முடித்த பிறகு அதில் எதையாவது சேர்ப்பது செலவை அதிகப்படுத்தும்.
இறுதியாக, குறைந்த செலவில் வீடு கட்ட தொடங்குவதற்கு முன் உங்களிடம் மொத்த தொகையும் இருக்க வேண்டிய தேவை இல்லை. ஒவ்வொரு கட்டத்திற்கும் ஏற்ப உங்களின் பணப்புழக்கத்தைச் சரி செய்துகொள்ளவும், அவ்வாறு வேலை முடிவதற்கு முன் நீங்கள் உங்கள் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்ய மாட்டீர்கள்.