Share:
Home Building Guide
Our Products
Useful Tools
Waterproofing methods, Modern kitchen designs, Vaastu tips for home, Home Construction cost
Share:
நடைமுறைத் தன்மையையும் அழகையும் டைல்ஸ் வழங்குவதால், இண்டீரியர் டிசைனில் இது ஒரு முக்கியமான கூறு ஆகும். அவை பல்வேறு மெட்டீரியல்களில் கிடைக்கின்றன, மேலும் அவை ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகளைக் கொண்டுள்ளன. உதாரணத்திற்கு, செராமிக் டைல்ஸ், அவற்றின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் இணக்கத்திறன் காரணமாகப் புகழ் பெற்றதாகும், மேலும் இவை பல வகை பயன்பாடுகளுக்கு ஏற்றவையாகும். மறுபுறம், போர்சலின் டைல்ஸ், அடர்த்தியான மற்றும் மீளாற்றல் கொண்ட வகை என்பதால், அதிக மனித நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு ஏற்றவை ஆகும். கிளாஸ் டைல்ஸ் அழகைக் கொண்டுவருகிறது மற்றும் அவை பெரும்பாலும் அலங்காரத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன, அதே சமயம், மார்பிள் மற்றும் கிரானைட் போன்ற நேச்சுரல் ஸ்டோன் டைல்ஸ் காலத்தைக் கடந்த நேர்த்தியைக் கொண்டுவருகிறது ஆனால் இவற்றைத் தவறாமல் பராமரிக்க வேண்டும். வுடன் டைல்ஸ், ஹார்ட்வுட் மற்றும் ஃபாக்ஸ் வுட் வகைகளில் கிடைக்கிறது, மேலும் இது டைல்ஸின் நீடித்து உழைக்கும் தன்மையுடன் மரத்தின் அழகியத் தோற்றத்தையும் வழங்குகிறது. இந்த வகை டைல்ஸையும் அவற்றின் பண்புகளையும் புரிந்துகொள்வது, உங்களின் இடங்களுக்கான வடிவமைப்பு முடிவுகளை எடுக்கும்போது மிகவும் முக்கியமானதாகும். வாருங்கள், எவ்வொரு வகையையும் விரிவாக புரிந்துகொள்வோம்.
செராமிக் டைல், அவற்றின் நீடித்து உழைக்கும் தன்மை, பன்முகத்தன்மை மற்றும் மலிவு விலை காரணமாக குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளுக்கான பிரபலமான தேர்வாக உள்ளது. அவை மேலும், போர்சலின் மற்றும் மொசைக் உள்ளிட்ட டைல்ஸ் வகைகளிலும் கிடைக்கின்றன.
போர்சலின் டைல்ஸ், அவற்றின் அடர்த்தி மற்றும் ஈரப்பதம், கறைகள், மற்றும் கீறல்கள் எதிர்ப்புத்திறன் காரணமாக, அதிக ஆள் நடமாட்டம் உள்ள மற்றும் வெளிப் பகுதிகளுக்கு மிகவும் ஏற்றதாகிறது. பல வகையான நிறங்கள் மற்றும் ஃபினிஷ்கள் மூலம், அவை பன்முகத்தன்மையையும், சீலிங் அல்லது சிறப்பு சுத்தம் செய்யும் தயாரிப்புகளுக்கான தேவை இல்லாமல் சுலபமான பராமரிப்பையும் வழங்குகிறது.
மொசைக் டைல்ஸ், வழக்கமாக 2 அங்குலம் அளவில் இருக்கும் இது, பெரும்பாலும் செராமிக், கிளாஸ் அல்லது நேச்சுரல் ஸ்டோன் உள்ளடக்கிய, மெஷ் பேக்கிங் மீது வைக்கப்பட்ட பன்முகமான அலங்கார டைல்ஸ் ஆகும். அவை சிக்கலான வடிவமைப்புகள் மற்றும் பேட்டர்ன்களை உருவாக்குவதில் சிறந்து விளங்குகின்றன, பொதுவாக குளியலறைகள், சமயலறைகள் மற்றும் நீச்சல் குளங்களை படைப்பாற்றல் மிக்க காட்சி தோற்றங்கள் மூலம் மேம்படுத்துகின்றன.
வுடன் டைல்ஸ், மரத்தின் இயற்கையான அழகுடன் டைல்ஸின் நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் எளிதான பராமரிப்பின் தனித்துவமான கலவையை வழங்குகிறது. இதன் கீழ் இரண்டு வகை டைல்ஸ் உள்ளன:
ஓக், மேபிள் மற்றும் வால்நட் போன்ற உண்மையான மரத்திலிருந்து உருவாக்கப்பட்ட ஹார்ட்வுட் டைல்ஸ், கிளாசிக் ஹார்ட்வுட் ஃப்ளோர் தோற்றத்தை பிரதிபலிக்கிறது. They offer versatile color and grain options, can be sanded and refinished, and are suitable for most rooms, especially living areas, bedrooms, and hallways.
வுட்-லுக் டைல்ஸ் என்றும் அழைக்கப்படும் ஃபாக்ஸ் வுட் டைல்ஸ், செராமிக் அல்லது போர்சலினிலிருந்து தயாரிக்கப்படுகிறது, மிகவும் சிக்கனமான விலையில் உண்மையான மரம் போன்ற தோற்றத்தை வழங்குகிறது. பல வகையான நிறங்கள் மற்றும் ஃபினிஷ்கள் மூலம், அழகையும் ஸ்டைலையும் அவை வழங்குகின்றன. இந்த டைல்ஸ் ஈரப்பதம், கீறல்கள் மற்றும் கறைகளை எதிர்ப்பதால், குளியலறைகள் மற்றும் சமயலறைகள் போன்ற ஈரப்பதம் அதிகமாக உள்ள இடங்களுக்கு ஏற்றதாகிறது, மேலும் அவற்றுக்கு குறைவான பராமரிப்பே தேவைப்படுகிறது, டைல்ஸின் பலன்களுடன் மரத்தின் தோற்றத்தை வழங்குகிறது.
கிளாஸ் டைல்ஸ், அவற்றின் கிளோஸி ஃபினிஷ் காரணமாக, வெளிச்சத்தைப் பிரதிபலிப்பதன் மூலம் இடத்தைப் பிரகாசமாக்குகிறது மற்றும் பன்முக வடிவமைப்பு ஆப்ஷன்களை வழங்குகிறது. அவற்றின் நீடித்து உழைக்கும் தன்மை, கறை எதிர்ப்புத்திறன் மற்றும் எளிதாக சுத்தம் செய்வது போன்ற காரணங்களால் சமயலறைகள், குளியலறைகள் மற்றும் பேக்ஸ்பிளாஷ்களில் பிரபலமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், அவை விலை அதிகமானதாக இருக்கும் மற்றும் சில நேரங்களில் முறையான அதெஷனுக்காக தொழில்முறை இன்ஸ்டலேஷன் தேவைப்படலாம்.
என்காஸ்டிக் டைல்ஸ் என்றும் அழைக்கப்படும் சிமெண்ட் டைல்ஸ், தனித்துவமான அலங்கார பேட்டர்ன்கள் மற்றும் அழகான நிறங்களை வழங்கும் வகையில், நிறமூட்டப்பட்ட சிமெண்ட் பயன்படுத்தி கைகளால் செய்யப்படுகிறது. அவை நீடித்து உழைக்கக்கூடியது மற்றும் அதிக ஆள் நடமாட்டம் உள்ள பகுதிகளுக்கு ஏற்றது, இயற்கையாகவே வழுக்கும் தன்மை இல்லாதது, ஆனால் அவற்றின் அழகைப் பராமரிக்க சீலிங் மற்றும் பராமரிப்பு தேவை. அதிக விலை கொண்டதாக இருந்தாலும், அவற்றின் காலம் கடந்த அழகிற்காகவும், அறைக்கென்று ஒரு குணத்தைச் சேர்ப்பதாலும் போற்றப்படுகின்றன.
வெட்ரிஃபைட் டைல்ஸ், பல்வேறு இடங்களுக்கு ஏற்ற நீடித்து உழைக்கும் மற்றும் பன்முகமான ஃப்ளோரிங் ஆப்ஷன் ஆகும். அவற்றின் வலிமை, குறைவான நுண்துளைகள் மற்றும் எளிதான பராமரிப்பு, குடியிருப்பு மற்றும் வணிக திட்டங்கள் ஆகிய இரண்டிற்குமான பிரபலமான தேர்வு ஆகிறது. அவை பல வகைப்படும்:
பாலிஷ் செய்யப்பட்ட கிளேஸ்டு வெட்ரிஃபைட் டைல்ஸ் அல்லது PGVT என்பது, வெட்ரிஃபைட் டைல்ஸ் மீது ஒரு கிளேஸ் லேயரைப் பூசி பாலிஷ் செய்வதன் மூலம் கிளோஸி ஃபினிஷை அடைந்த செராமிக் டைல்ஸ் ஆகும். அவை நவீன கால இண்டீரியர்களுக்கு நேர்த்தியான மற்றும் நீடித்து உழைக்கக்கூடிய ஆப்ஷனை வழங்குகிறது, இவை குடியிருப்பு மற்றும் வணிக பகுதிகளுக்கு ஏற்றதாகப் பல்வேறு வடிவமைப்புகள் மற்றும் நிறங்களில் கிடைக்கின்றன.
GVT டைல்ஸ் என்று அழைக்கப்படும் கிளேஸ்டு வெட்ரிஃபைட் டைல்ஸ், பலவேறு வடிவமைப்புகள் மற்றும் பேட்டர்ன்களுடன் ஒரு கிளேஸ் லேயரைக் கொண்டிருக்கும். PGVT உடன் ஒப்பிடும்போது இவை குறைவான கிளோஸி ஃபினிஷ் கொண்டிருந்தாலும், அவை அழகு சார்ந்த பன்முகத்தன்மையை வழங்குகிறது. இந்த நீடித்து உழைக்கும் மற்றும் நீர் எதிர்ப்பு டைல்ஸ், சமயலறைகள், குளியலறைகள் மற்றும் ஓய்வறைகள் போன்ற உட்புற பகுதிகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படுகின்றன, இது செராமிக்ஸின் நடைமுறைத் தன்மையுடன் சேர்த்து இயற்கையான மெட்டீரியல்களின் தோற்றத்தையும் வழங்குகிறது.
நேச்சுரல் ஸ்டோன் டைல்ஸ், குவாரி டைல்ஸ், டெர்ரகோட்டா டைல்ஸ், மற்றும் உலோக டைல்ஸ் போன்ற மற்ற பல வகை டைல்ஸ்கள் உள்ளன, அவற்றிலிருந்து அவர்களின் வீட்டிற்கு பொருத்தமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த ப்ளாக் போஸ்ட்டில், இண்டீரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைனில் பொதுவாக பயன்படுத்தப்படும் பல்வேறு வகை டைல்ஸைக் குறித்து நாம் பார்த்தோம். கூடுதலாக, தனித்துவமான அழகியலை வழங்கும் மார்பிள், கிரானைட், டெர்ரகோட்டா மற்றும் டிராவெர்டைன் போன்ற மற்ற டைல் வகைகளையும் பார்த்தோம். ஒவ்வொரு வகையும் வெவ்வேறு சூழ்நிலைகள் மற்றும் வீட்டு வடிவமைப்புகளைச் சார்ந்து மதிப்புமிக்கதாக உள்ளது. இந்த ஆப்ஷன்களைப் புரிந்துகொள்வது, உங்களின் விருப்பங்களுக்கேற்ற அழகான மற்றும் செயல்பாட்டு இடங்களை உருவாக்குவதில் உதவுகிறது.