வாட்டர்ப்ரூஃபிங் முறைகள், நவீன சமையலறை வடிவமைப்புகள், வீட்டிற்கான வாஸ்த்து குறிப்புகள், Home Construction cost

தொடர்பில் இருங்கள்

உங்கள் கேள்விகளுக்கு உண்டான பதில்கள்…

சரியான வகையைத் தேர்ந்தெடுக்கவும்

உங்கள் துணை-வகைப்பாட்டினை தேர்ந்தெடுங்கள்

acceptence

மேலும் தொடர இந்த பெட்டியை சரிபார்க்கவும்


எலிவேஷன் திட்டம் என்றால் என்ன? அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முழுமையான வழிகாட்டி

கட்டுமான உலகில், ஒரு கற்பனையை நிஜமாக்குவதற்கு துல்லியமாகத் திட்டமிடல், அளவிடல் மற்றும் செயல்படுத்துதல் வேண்டும். "எலிவேஷன் திட்டம்" என்பது எந்தவொரு கட்டுமான திட்டத்தின் முக்கிய ஆதாரமாக அமையக்கூடிய அடிப்படை அம்சங்களில் ஒன்றாகும். இந்தத் திட்டம், ஒரு கட்டமைப்பின் வடிவமைப்பு குறித்து கட்டிடக் கலைஞர்கள், பில்டர்கள் மற்றும் பொறியாளர்களுக்கான மூல வரைபடமாகச் செயல்படும் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும்.

Share:


முடிக்கப்பட்ட கட்டிடம் எப்படி காட்சியளிக்கும் என்ற யோசனையை எலிவேஷன் திட்டம் நமக்கு வழங்குகிறது. இது கட்டமைப்பு மற்றும் கட்டிடக்கலை விவரங்களை எடுத்துரைக்கும், ஒரு கட்டிடத்தின் வெளிப்பக்கங்களின் காட்சி உருமாதிரி ஆகும். சில சந்தர்ப்பங்களில், இந்த திட்டங்கள் கட்டிடத்தின் உட்புறம் குறித்தும் எடுத்துரைக்கும். ஃப்ளோர் திட்டம் அல்லது சீலிங் திட்டமாக கட்டிடத்தின் லேயவுட்டை எடுத்துக்காட்டும் ஒரு எலிவேஷன் திட்டம், கட்டிடத்தின் உயரம் மற்றும் தோற்றத்தைக் காட்டுகிறது.

 

கட்டிடம் முடிவுற்றதும் எப்படி தோற்றமளிக்கும் என்பதைக் காட்சிப்படுத்தி புரிந்துகொள்வதற்காக கட்டிடக் கலைஞர்கள், பில்டர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு உதவுவதன் மூலம் அவை ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. கட்டிடத்தின் வெளிப்புற அம்சங்கள் மற்றும் அளவுகளைக் குறிப்பிடுவதன் மூலம், எளிதான கட்டுமானத்திற்கு, பராமரிப்பிற்கு மற்றும் மாற்றியமைத்தலுக்கு இந்த திட்டங்கள் உதவுகின்றன. கட்டுமானத்தைத் துவங்குவதற்கு முன் அந்த திட்டத்தில் ஈடுபடவுள்ள அனைவரும் வடிவமைப்பில் திருப்தியடைவதை உறுதி செய்வதன் மூலம் நேரம், வளங்கள் மற்றும் பணமும் மிச்சப்படுத்தப்படுகிறது.

 

இந்த ப்ளாகில், எலிவேஷன் திட்டம் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம் மற்றும் கட்டுமானத் திட்டங்களை வெற்றிகரமாக முடிப்பதில் மதிப்புமிக்க சொத்து என்பதை எப்படி நிரூபிக்கிறது என்பதை நாம் காண்போம்.



எலிவேஷன் வரைபடத்தில் எது எல்லாம் சேர்க்கப்படும்?



ஒரு எலிவேஷன் வரைபடத் திட்டத்தை உருவாக்க, பிரதான கதவு, ஜன்னல்கள், ரூஃப் பகுதிகள், அளவுகள், லெஜெண்ட்கள் மற்றும் அளவுகோல் போன்ற பல்வேறு கூறுகள் சேர்க்கப்படும். இந்த திட்டங்கள் வழக்கமாக நான்கு திசைகளுக்காக உருவாக்கப்படுகின்றன: வடக்கு, தெற்கு, கிழக்கு, மற்றும் மேற்கு. ஒரு எலிவேஷன் திட்டத்தில் வழக்கமாகச் சேர்க்கப்படும் முக்கியமான கூறுகள் இதோ:

 

1. கட்டிடக்கலை விவரங்கள்

இந்த திட்டமானது, கட்டிடத்தின் ஒட்டுமொத்த அழகியல் தோற்றத்திற்குப் பங்களிப்பை வழங்கும் முகப்பு வடிவமைப்பு, வெளிப்புற ஃபினிஷ்கள், அலங்காரக் கூறுகள் மற்றும் பிற அலங்கார அம்சங்கள் போன்ற கட்டிடக்கலை அம்சங்களைக் காட்டுகிறது.

 

2. அளவுகள்

திட்டத்தில் துல்லியமான அளவீடுகள் மற்றும் அளவுகள் சேர்க்கப்பட்டுள்ளதால், முகப்பில் உள்ள ஒவ்வொரு கூறுகளின் சரியான அளவு மற்றும் அளவுகோலைப் பில்டர்களால் தீர்மானிக்க முடிகிறது. கட்டுமானத்தின் போது இந்த தகவல்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன.

 

3. அளவுகோல்

அவை அளவுகோல் அடிப்படையில் வரையப்படுவதால், கட்டிடத்தில் உள்ள வெவ்வேறு கூறுகளின் அளவுகள் மற்றும் தூரங்களைக் கட்டிடக் கலைஞர்களால், பில்டர்களால் மற்றும் வாடிக்கையாளர்களால் புரிந்துகொள்ள முடிகிறது.

 

4. ஜன்னல்கள் மற்றும் கதவுகள்

எலிவேஷன் திட்டத்தில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் ப்ளேஸ்மெண்ட், அளவு மற்றும் ஸ்டைல் குறிப்பிடப்பட்டிருப்பதால், ஒட்டுமொத்த வடிவமைப்பில் இந்த திறப்புகள் எப்படி பங்களிப்பை வழங்குகின்றன என்பது குறித்த தெளிவான யோசனையைப் பெற முடிகிறது.

 

5. ரூஃப் வடிவமைப்பு

இந்த திட்டத்தில் ரூஃப் வடிவமைப்பும் அடங்கும், அதன் சரிவு, ஸ்டைல் மற்றும் சிம்னிகள் அல்லது ஸ்கைலைட்கள் போன்ற எதாவது ரூஃப் அம்சங்களைக் காட்டுகிறது. இது ஒட்டுமொத்த தோற்றத்தைக் காட்சிப்படுத்த உதவுகிறது மற்றும் ரூஃபிங் எலிமெண்ட்களைச் சரியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்கிறது.

 

6. செங்குத்து உயரங்கள்

ஒரு எலிவேஷன் வரைபடமானது ஃப்ளோர்களின் எண்ணிக்கை, சீலிங்கின் உயரம் மற்றும் ரூஃப்லைன் உட்பட, கட்டிடத்தின் செங்குத்து அளவுகள் மற்றும் உயரங்களையும் குறிப்பிடுகிறது.

 

7. மெட்டீரியல் குறித்தத் தகவல்கள்

இந்த திட்டம் பெரும்பாலும் வெளிப்புறத்தில் பயன்படுத்தப்படும் செங்கற்கள், கற்கள், ஸ்டக்கோ அல்லது சைடிங் போன்ற மெட்டீரியல்களைக் குறிப்பிடுகிறது. இது கட்டுமானத்தின்போது தகவலறிந்த முடிவுகளை எடுக்க பில்டர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு உதவுகிறது.

 

8. லேண்ட்ஸ்கேப்பிங் மற்றும் வெளிப்புற அம்சங்கள்

சில சந்தர்ப்பங்களில், கட்டிடத்தின் ஒட்டுமொத்த அழகில் பங்களிப்பை வழங்கும் தோட்டங்கள், நடைபாதைகள், டிரைவ்வேக்கள் மற்றும் பிற வெளிப்புற அம்சங்கள் போன்ற லேண்ட்ஸ்கேப்பிங் கூறுகளும் இந்த திட்டங்களில் சேர்க்கப்படும்.


ஒரு வீட்டைக் கட்டும்போது எலிவேஷன் திட்டங்களின் முக்கியத்துவம்



எலிவேஷனைக் கட்டுவதென்று வரும்போது, இந்த திட்டங்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டுள்ளன. கட்டுமான செயல்முறையில் எலிவேஷன் திட்டம் ஏன் முக்கியமானது என்பதற்கான பல்வேறு காரணங்களைக் காண்போம்:

 

1. எளிதான கட்டுமானம்

இந்த திட்டங்கள் மூல வரைபடமாகச் செயல்பட்டு, கட்டிடத்தின் வெளிப்புற விவரங்கள், அளவுகள் மற்றும் ஃபினிஷ்களைக் காட்டுகிறது. இது வடிவமைப்பைத் துல்லியமாகச் செயல்படுத்தக் கட்டுமான குழுக்களுக்கு உதவுகிறது, இதன் விளைவாகச் சீரான மற்றும் மிகவும் திறன்மிக்கக் கட்டுமான செயல்முறைக் கிடைக்கிறது.

 

2. எளிதான பராமரிப்பு

இது போன்ற திட்டம், வீட்டு உரிமையாளர்கள் தங்களின் வீடுகளின் வெளிப்புறத்தில் உள்ள எதாவது பிரச்சனைகள் அல்லது தேவையான பழுதுபார்த்தலைக் கண்டறிந்து சரி செய்வதை எளிதாக்குகிறது. பராமரிப்பு செயல்முறை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும், செலவு குறைந்ததாகவும் இருப்பதை இது உறுதி செய்கிறது.

 

3. வளங்களை மிச்சப்படுத்துதல்

எலிவேஷன் திட்டம் மூலமாக கட்டிடத்தின் வெளிப்புற வடிவமைப்பின் தெளிவான காட்சியைப் பெறுவதன் மூலம், கட்டுமானத்தின் போது பில்டர்கள் செலவு அதிகமான தவறுகளைத் தவிர்க்கலாம். இது மீண்டும் வேலை செய்வதை அல்லது வடிவமைப்பில் மாற்றங்கள் செய்வதைத் தடுப்பதன் மூலம் நேரம் மற்றும் வளங்களை மிச்சப்படுத்துகிறது.

 

4. எளிதாக மாற்றியமைத்தல்

கட்டிடத்தில் எதாவது சேர்க்க அல்லது மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளபோது இந்த திட்டம் மதிப்புமிக்கதாக இருக்கும். அறைய விரிவாக்கம் செய்வது, ஜன்னலைச் சேர்ப்பது, அல்லது ரூஃப்லைனை மாற்றியமைப்பது போன்ற எதுவாக இருந்தாலும், துல்லியமான மற்றும் உகந்த மாற்றங்களைச் செய்ய இந்த திட்டம் ரெஃபரன்ஸ் பாயிண்ட்டாகச் செயல்படும்.

 

5. எளிதான அணுகல்

எலிவேஷன் வரைபடத்தை உருவாக்குவதில் எளிதான அணுகல் ஒரு முக்கியமான கருத்தாகும். ஓவர்ஹேங் கட்டுமானத்திற்கு சவாலாக உள்ள அல்லது கட்டிடத்தைச் சுற்றி நகர்வதற்கு தடையாக ஏற்கனவே உள்ள உள்ள சுவர்கள் மற்றும் மரங்களைச் சேர்ப்பதன் மூலம், இந்த எலிவேஷன் திட்டம், எதாவது சாத்தியமான பிரச்சனைகளைக் குறித்து எதிர்பார்க்க மற்றும் சரி செய்ய உரிமையாளர் அல்லது பில்டரை அனுமதிக்கிறது.


எலிவேஷன் வரைபடம் என்றால் என்ன மற்றும் எலிவேஷன் திட்ட வரைபடத்தை வரைவதற்கான வழிகள் என்ன


1. பிரதான ஃப்ளோர் சுவரின் பேஸ்லைனை வரைதல்

பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்தி ஒரு எலிவேஷன் திட்டத்தை உருவாக்க, பிரதான ஃப்ளோர் சுவர் பேஸ்லைனை நீங்கள் வரையத் தொடங்க வேண்டும். உங்களின் ஃப்ளோர் திட்ட வரைபடங்களைப் பார்த்து, எந்தவொரு சுவர்களின் கிடைமட்ட தூரத்தையும் அளவிடுவதன் மூலம் இதைச் செய்யலாம். வெளிப்புற பக்கச்சுவர்களுக்கு எந்தவொரு சைடிங் மெட்டீரியலின் தடிமனையும் சேர்க்க வேண்டும்.

 

2. சுவரின் உயரங்களைத் தீர்மானித்தல்

பிரதான ஃப்ளோர் சுவர்களை அளவிட்டப் பிறகு, வெளிப்புற சுவர்களுக்காக நீங்கள் செங்குத்து கோடுகளை வரைவீர்கள். முடிக்கப்படாத ஃப்ளோர் உயரத்தின் மேல், சுவர்கள் எவ்வளவு உயரம் இருக்கும் என்பதைத் தீர்மானிப்பது முக்கியமாகும். கட்டிடத்தின் பிரிவில், அறைகளின் சீலிங் உயரத்தையும் கருத்தில் கொண்டு, அதற்கு மேல் எதாவது ஃப்ளோர் அல்லது சீலிங்க் ஜாயிஸ்ட்களின் உயரத்தையும் சேர்க்கவும்.

 

3. ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் அவுட்லைன்களை வரைதல்

சுவரின் உயரங்களைத் தீர்மானித்த பிறகு, ஜன்னல்கள் மற்றும் கதவுகளின் அவுட்லைன்களை வரையலாம். வெளிப்புற சுவர்கள் மற்றும் ஜன்னல்களைத் துல்லியமாக வைக்க, உங்கள் ஃப்ளோர்களின் கிடைமட்ட கோடுகளில் இருந்து அளவிடவும். துல்லியத்தை உறுதி செய்ய, உங்களின் எலிவேஷன் வரைபடத்தில் ஒவ்வொரு ஜன்னல் மற்றும் கதவுக்கான அளவுகளைப் பெற ஜன்னல் மற்றும் கதவு குறித்து தனியாகக் கலந்தாலோசிக்கவும்.

 

4. ரூஃப்களை வரைதல்

இப்போது நீங்கள் உங்கள் திட்டத்திற்கான விருப்பமான ரூஃப்லைனை உருவாக்கலாம். விருப்பமான கட்டிடக்கலை ஸ்டைலை அடைய கேபில், ஷெட், ஹிப், அல்லது காம்ப்ரெல் போன்ற வெவ்வேறு ரூஃப் வகைகளைத் தேர்வு செய்யலாம். வரையப்படும் எலிவேஷன் திட்டத்தில் ரூஃப் ஓவர்ஹேங் அல்லது உட்புற சுவருக்கு கீழே டிராப் ஆகுமா என்பதைக் கருத்தில் கொள்வதன் மூலம், ஒருங்கிணைந்த மற்றும் இனிமையான காட்சி கொண்ட வடிவமைப்பை உறுதி செய்யலாம்.

 

5. டெக்ஸ் மற்றும் ரெய்லிங்கைச் சேர்த்தல்

ஜன்னல்கள், கதவுகள், ரூஃப் மற்றும் அடிப்படை வரைபடம் முடிக்கப்பட்டவுடன், டெக்ஸ் அல்லது போர்ச்கள், ரெய்லிங் மற்றும் படிக்கட்டுகளை நீங்கள் சேர்க்கலாம். உங்களின் பிரதான ஃப்ளோர் மற்றும் வீட்டைச் சுற்றி லேண்ட்ஸ்கேப்பிங்கின் இறுதி மட்டம் இடையிலான உயர வேறுபாட்டைத் துல்லியமாக அளவிடுவதை உறுதி செய்யவும்.

 

6. கலந்துரையாடல்

கருத்துகள் மற்றும் நுண்ணறிவுகளைப் பெறுவதற்காக, ஆரம்ப கட்ட வரைபடம் குறித்து தொடர்புடைய உரிமையாளர்களிடம் கலந்துரையாடவும். இந்த கூட்டு அணுகுமுறை, வடிவமைப்பின் முழுமையான மதிப்பாய்வை அனுமதிக்கிறது மற்றும் எதாவது கவலை அல்லது மாற்றங்கள் சரி செய்யப்படுவதை உறுதி செய்கிறது. பிறகு திட்டத்தை மாற்றியமைப்பதன் மூலம் வரைபடத்தை மேம்படுத்தலாம்.

 

7. வடிவமைப்பை இறுதி செய்தல்

தேவையான மாற்றங்கள் மற்றும் பரிந்துரைகளைச் சேர்த்த பிறகு, இது எலிவேஷன் வரைபடத்தின் வடிவமைப்பை இறுதி செய்வதற்கான நேரம் ஆகும். அது வாடிக்கையாளரின் கற்பனைக்கு ஒத்ததாக, கட்டிட விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளையும், எதாவது குறிப்பிட்ட தேவைகளையும் பூர்த்தி செய்வதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.



இறுதியில், எலிவேஷன் திட்டம் ஒரு கட்டிடத்தின் வெளிப்புறத்தின் துல்லியமான காட்சி உருமதிரியை வழங்குகின்றது. நீங்கள் வீட்டு உரிமையாளர், பில்டர் அல்லது கட்டிடக் கலைஞராக இருந்தாலும் சரி, ஒரு கட்டிடத் திட்டம் வெற்றிகரமாக முடிவதை உறுதி செய்ய இந்த உருமாதிரி முக்கியமானதாகும். அவற்றின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது உங்கள் கற்பனையைத் திறம்பட நிஜமாக்கலாம்.



அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

 

1. எது முதலில் வருகிறது, ஃப்ளோர் திட்டமா அல்லது எலிவேஷன் திட்டமா?

பொதுவாக, வடிவமைப்பு செயல்முறையில், எலிவேஷன் திட்டத்திற்கு முன் ஃப்ளோர் திட்டம் வருகிறது. எலிவேஷன் வரைபடங்களுக்குக் கட்டிடத்தின் உயரங்களைக் குறித்த அறிவு தேவை ஆகும், அதைக் கட்டமைப்பின் ஃபுட்ப்ரிண்ட்டை நிறுவிய பிறகு மட்டுமே தீர்மானிக்க முடியும்.

 

2. எத்தனை வகை எலிவேஷன்கள் உள்ளன?

முன், பின், வலது, இடது பக்கம் மற்றும் உட்புற எலிவேஷன்கள் உள்ளிட்ட பலவகையான எலிவேஷன்கள் உள்ளன. இந்த எலிவேஷன் வரைபடங்கள் கட்டிடத்தின் கட்டிடக்கலை வடிவமைப்பைச் சார்ந்து வெவ்வேறு கண்ணோட்டங்கள் மற்றும் விவரங்களை வழங்குகின்றன.

 

3. ஒரு வீட்டின் நான்கு எலிவேஷன்கள் என்ன?

முன், பின், வலது மற்றும் இடது பக்க எலிவேஷன்கள் ஒரு வீட்டின் நான்கு எலிவேஷன்கள் ஆகும். இந்த எலிவேஷன்கள் வெவ்வேறு கண்ணோட்டங்களில் இருந்து கட்டிடத்தின் வெளிப்புறத்தின் முழுமையான காட்சியை வழங்குகிறது, கட்டமைப்பின் அளவுகள், அம்சங்கள் மற்றும் அழகியல் தோற்றங்களைத் துல்லியமாகக் குறிப்பிட வடிவமைப்பாளர்கள் மற்றும் கட்டிடக் கலைஞர்களை அனுமதிக்கிறது.


தொடர்புடைய கட்டுரைகள்




பரிந்துரைக்கப்பட்ட வீடியோக்கள்




வீட்டு கட்டுமானத்திற்கான


செலவு கால்குலேட்டர்

வீடு கட்டும் ஒவ்வொருவரும் தங்கள் கனவு வீட்டைக் கட்ட விரும்புகிறார்கள், ஆனால் அதிக பட்ஜெட் செலவு செய்யாமல் அவ்வாறு செய்யுங்கள். 

logo

EMI கால்குலேட்டர்

ஒரு வீட்டுக்கடன் வாங்குவது என்பது வீடு கட்டுவதற்கான பணத்தைப் பெறும் வழிகளில் சிறந்த ஒன்றாகும். ஆனால் அதற்கு எவ்வளவு EMI கட்ட வேண்டும் என்ற கேள்வியை எங்களிடம் அடிக்கடி கேட்கிறார்கள்.

logo

தயாரிப்பு முன்னறிவிப்பாளர்

ஒரு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான ஆரம்ப கட்டங்களில் சரியான தயாரிப்புகளைத் தேர்ந்தெடுப்பது வீடு கட்டுபவருக்கு முக்கியம்.

logo

ஸ்டோர் லொக்கேட்டர்

ஒரு வீடு கட்டுபவருக்கு, வீடு கட்டுவது பற்றிய அனைத்து மதிப்புமிக்க தகவல்களையும் பெறக்கூடிய சரியான கடையை கண்டுபிடிப்பது முக்கியம்.

logo

Loading....